கருவேப்பம்பூண்டி ஓம்சக்தி ஸ்ரீ கீர்த்திமதி அன்னை ஆலயத்தில் சித்திரைப் பெளர்ணமி பெருவிழா  

புதன்கிழமை, 10 மே 2017      காஞ்சிபுரம்
kanchipuram 2017 05 10

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியம் அடுத்த கருவேப்பம்பூண்டி கிராமத்திலுள்ள ஓம்சக்தி ஸ்ரீ கீர்த்திமதி அன்னை ஆலயத்தில் .புதன்கிழமையன்று சித்திரைப் பெளர்ணமி பெருவிழாவெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 5 மணிக்கு உலக மக்கள் நன்மை வேண்டிசிறப்பு யாகவேள்வியும் சிறப்பு பூஜைகளும் நடைப்பெற்றது.

சிறப்பு பூஜை

ஓம்சக்தி மஹா பக்ரஹா காளிதேவி சிம்மவாஹினிக்கு 1008 பால்குட அபிஷேகம்நடைபெற்றது. முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு இரத ஊர்வலம் நடைபெற்றது. இரதத்தில் ஓம்சக்தி மஹாபக்ரஹாகாளிதேவி சிம்மவாஹினி அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில்  வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். விழாவில் உத்தரமேரூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் மற்றும் முன்னாள் அமைச்சர் மானாம்மதி .வி.சோமசுந்தரம் உட்பட பெருந்திரளாக பக்தர்கள்  கலந்து கொண்டு அன்னையின் அருளாசி பெற்றனர்.

ஓம்சக்தி பீடம் மங்கையின் மகிமை அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாகுழுவினர் பி.வெங்கடேசன், ரா.மாதவன், ரா.அரிதாஸ் சிறப்பாக செய்திருந்தனர். இரண்டு நாட்களும் பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: