முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும் : திருச்சி தி.மு.க. மாநாட்டில முதல்வர் மு.கஸ்டாலின் பேச்சு

திங்கட்கிழமை, 9 மார்ச் 2026      தமிழகம்      அரசியல்
CM-1-2026-03-09

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும் என்று திருச்சி தி.மு.க. மாநாட்டில முதல்வர் மு.கஸ்டாலின் பேசினார்.

12-வது மாநாடு....

திருச்சியில் தி.மு.க.வின் 12-வது மாநில மாநாட்டில் முதல் அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திரும்பும் திசையெல்லாம் அண்ணாவின் தம்பிகள்,  தி.மு.க.வின் பெரும் சேனை திரண்டுள்ளது. சேனையின் தலைமை தொண்டன் நான். 10 லட்சம் பேர் திரண்டுள்ள பிரமாண்ட மாநாடாக இது நடைபெற்று வருகிறது. தமிழகமே திருச்சியில் திரண்டுள்ளது. உங்கள் உற்சாகம் என் வயதை குறைத்துள்ளது. என் இளமைக்கு காரணம் தொண்டர்கள் அன்புதான்.

72 ஆண்டு கால....

நேற்று இன்று தொடங்கிய அன்பல்ல இது. 72 ஆண்டு கால அன்பு. தி.மு.க.வின் மாநாட்டால் சிறுகனூர் பெருகனூராக மாற்றியுள்ளது. 3 மாதங்களாக தி.மு.க. மாநாடுகளை நடத்தி தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளோம். கிரிக்கெட்டில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெறுவது போல தேர்தலில் வெற்றி பெற போகிறோம் திருச்சி என்றாலே திருப்பம்தான். தி.மு.க. தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என்ற உறுதியை இந்த மாநாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நடு நம்மை நம்பித்தான் உள்ளது; நாமும் தமிழ்நாட்டை நம்பித்தான் உள்ளோம்.

5 ஆண்டுகளில்....

தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும். திருச்சியில் அறிவித்த 7 இலக்குகளையும் ஐந்தாண்டு கால ஆட்சியில் நிறைவேற்றி உள்ளோம். 5 ஆண்டுகளில் இவ்வளவு சாதனைகளை மாநில அரசு செய்ய முடியுமா என வியக்கும் அளவுக்கு ஆட்சி நடத்தியுள்ளோம். அதி.மு.க. ஆட்சியில் தொழில் முதலீட்டுக்காக போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 471 மட்டுமே. தி.மு.க. ஆட்சியில் 1,190 தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பதங்கள் போடப்பட்டுள்ளன. அதி.மு.க. ஆட்சியை விட 3 மடங்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன” ” இவ்வாறு அவர் பேசி வருகிறார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து