Idhayam Matrimony

டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 131 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்த பி.சி.சி.ஐ.

செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2026      விளையாட்டு
T20-2026-03-10

மும்பை, ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு இதுவரை இல்லாத அளவிலான பரிசுத்தொகையை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. பி.சி.சி.ஐ அறிவித்த மொத்த பரிசுத்தொகை ரூ.131 கோடி.

3-வது முறையாக.... 

ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கோப்பைப் போட்டியில் வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ. பரிசுத்தொகை அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில், ’அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து மதிப்புமிக்க கோப்பையை 3-வது முறையாக இந்திய அணி வென்றுள்ளது.

இருமுறை வென்ற...

மேலும், டி20 உலகக் கோப்பையை தொடர்ந்து இருமுறை பெற்ற முதல் அணி என்ற சாதனையையும் இந்திய அணி பெற்றுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குக் காரணமான அணியின் வீரர்கள், ஊழியர்கள், தேர்வுக்குழு உறுப்பினர்கள் என அனைவருக்கும் பி.சி.சி.ஐ. வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. எதிர்காலத்தில் நமது அணி இதேபோன்று மேலும் பல வெற்றிகளைப் பெறவேண்டும்.இந்த மாபெரும் வெற்றிக்காக ரூ. 131 கோடியை பரிசுத் தொகையாக இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ. வழங்குகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளனர். 

பரிசாக பெரும் தொகை

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு இதுவரை வழங்கப்பட்டதிலேயே அதிக அளவிலான பரிசுத்தொகை இதுவாகும். இதற்கு முன்னர் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு டி20 உலகக் கோப்பையை வென்றபோது ரூ. 125 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றபோது ரூ. 58 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டிருந்தது. மேலும், கடந்தாண்டு இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்றபோது ரூ. 51 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து