எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பெரம்பலூர் மாவட்டத்தில் 34.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 411 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 44.67 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 315 புதிய திட்டப் பணிகளுக்கும் துணை முதல்வர் உதயநிதி அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (12.3.2026) பெரம்பலூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடைபெற்ற சமூக நீதிக்காவலர் வே.ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி அமைக்கப்பட்ட வே.ஆனைமுத்துவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து சமூக நீதிக்காவலர் வே.ஆனைமுத்துவின நூற்றாண்டு விழா மலரினை வெளியிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் 34.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 411 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 44.67 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 315 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 4,182 பயனாளிகளுக்கு 102.40 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 5,945 பயனாளிகளுக்கு 177.87 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகளையும், ஒரு இசைக்கலைஞருக்கு 43,000 ரூபாய் மதிப்பிலான இசைக்கருவிகளை வாங்குவதற்கான ஆணையையும் வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


