முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரானுக்கு எதிரான தீர்மானம்: இந்தியா உள்ளிட்ட 135 நாடுகள் ஆதரவோடு நிறைவேற்றம்

வியாழக்கிழமை, 12 மார்ச் 2026      உலகம்
UN 2023-09-23

ஜெனீவா, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் கொடூரத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கொண்டுவரப்பட்ட தீர்மானம் இந்தியா உள்ளிட்ட 135 நாடுகள் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தலங்கள் மீது ஈரான் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் கொடூரத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தில், “மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதலையும், ஹார்முஸ் ஜலசந்தியை மூடி கடல்சார் வர்த்தகத்தில் தலையிடுவதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியா உள்பட 135 நாடுகள் ஆதரவளித்ததை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேவேளையில், சீனா இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தது. ரஷ்யாவும் தீர்மானத்தை விமர்சித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து