முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 12 மே 2017      விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம், கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாடு சங்கம், சென்னை சார்பாக எச்.ஐ.வி. எய்ட்ஸ் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 07.05.2017 முதல் 10.05.2017 வரை நடைபெற்றது.

 ஆய்வுக்கூட்டம்

கலெக்டர் இல.சுப்பிரமணியன்,,  தலைமையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் டாக்டர்.கே.செந்தில்ராஜ்,,  கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் திடலில் அமைக்கப்பட்டிருந்த எச்.ஐ.வி. எய்ட்ஸ் குறித்த காட்சி அரங்கு, நடமாடும் நம்பிக்கை மைய ஊர்தி, மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு பிரசுரங்கள் மற்றும் இலவச ஆணுறை விநியோகப் பணி ஆகியவற்றையும், விக்கிரவாண்டி, தோகைப்பாடி, திருக்கோவிலூர், முகையூர், ஜி.அரியூர் ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அங்கு செயல்படும் நம்பிக்கை மையம், சுக வாழ்வு மையம், இரத்த வங்கி, துணை கூட்டுமருந்து சிகிச்சை மையம் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழுப்புரம் மனிதவள மேம்பாட்டு நிறுவன வளாகத்தில், மாவட்டத்தில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் டாக்டர்.கே.செந்தில்ராஜ்,,  தெரிவித்ததாவது:

எச்.ஐ.வி. தொடர்பான

மாவட்டத்தில் உள்ள கருவுற்ற அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும், எச்.ஐ.வி. தொடர்பான ஆலோசனை மற்றும் பரிசோதனை வழங்கப்பட வேண்டும்.  பொது மக்களிடையே எச்.ஐ.வி. தொற்றினை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.  கல்வராயன்மலை போன்ற பகுதிகளில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  இரத்த வங்கிகளில் அதிக முகாம்கள் நடத்தப்பட்டு போதிய அளவு இரத்த இருப்பு வைத்திருக்க வேண்டும் என திட்ட இயக்குநர் டாக்டர்.கே.செந்தில்ராஜ்,,  தெரிவித்தார். ஆலோசனைக் கூட்டத்தில், கலெக்டர் இல.சுப்பிரமணியன்,,  பேசியதாவது:

சிறப்பு கவனம்

விழுப்புரம் மாவட்ட சுகாதாரப் பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தனி சிறப்பு கவனம்; செலுத்தி வருகிறது.  எச்.ஐ.வி. எய்ட்ஸ் தடுப்பு பணிகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கலெக்டர் அவர்களின் பொது நிதியிலிருந்து ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மருத்துவமனைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இம்மாவட்டத்தில் சிறப்பாக எச்.ஐ.வி. தடுப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளருக்கு வருகின்ற சுதந்திர தினத்தன்று சிறந்த பணியாளருக்கான சான்று வழங்கப்படும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன்,,  தெரிவித்தார்.

பலர் பங்கேற்பு

இக்கூட்டத்தில், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.சவுண்டம்மாள், டாக்டர்.ஜெமினி, நிர்வாக அலுவலர் நடராஜன், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாடு சங்கத்தின் இணை இயக்குநர்கள் லீலாகிருஷ்ணன், டாக்டர்.பப்பி, சத்தியன், மக்கள் தொடர்பு அலுவலர் புகழ், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு திட்ட மேலாளர் துரைசாமி, மேற்பார்வையாளர் பிரேமா, மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு அலுவலர் செல்வம் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாடு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்