வி ஐ டி பல்கலைக்கழகத்தின் பொறியியல் நுழைவுத்தேர்வு இந்திய அளவில் ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெறுகிறது

சனிக்கிழமை, 13 மே 2017      சென்னை
VIT Collage 2017 05 13

 வி ஐ டி பல்கலைக்கழகத்தின் பொறியியல் நுழைவுத்தேர்வு 2017 (விட்டி-17)அகில இந்திய அளவில் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை சிறப்பாக நடத்தப்பட்டது

20 ஆயிரம் இடங்கள்

இதில் இந்திய அளவில் இரண்டு லட்சத்து இருபத்து நான்காயிரம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.இதை அடுத்து பொறியியல் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு மே 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை வேலூர்,சென்னை, போபால்(மத்திய பிரதேசம்) மற்றும் அமராவதி (ஆந்திரா) ஆகிய நகரங்களில் நடை பெற்றது. முதல் 20,000 இடங்களை பெற்றவர்கள் முதல் கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டனர். இரண்டாம் கட்ட கலந்தாய்வு மே 15 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர்.G.விஸ்வநாதன் மற்றும் துணை தலைவர் திரு.சங்கர் விஸ்வநாதன் அவர்களும் சில மாணவ மாணவிகளுக்கு சேர்க்கைக்கான அனுமதி கடிதத்தை அளித்தனர். பல்கலைக்கழக இணை துணை வேந்தர் முனைவர். P.குணசேகரன், முனைவர். P.K. மனோகரன் கூடுதல் பதிவாளர், முனைவர் R. பத்மநாபன் (இணை இயக்குனர் மாணவர்சேர்க்கை) ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: