முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோட்டில் சிறப்பு உறுப்பினர் கல்வித்திட்ட முகாம்

சனிக்கிழமை, 13 மே 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்குட்பட்ட கூகலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் 11.05.2017 மாலை 4.00 மணிக்கு சங்க வளாகத்தில் சிறப்பு உறுப்பினர் கல்வித்திட்ட முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமிற்கு கூகலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் .கே.எஸ். பழனிச்சாமி  தலைமை தாங்கினார்.  அவர்தம் தலைமைஉரையில் இச்சங்கம் 9.11.1957 ல் ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகளாக கூகலூர், சக்கரபாளையம், தொட்டிபாளையம், தண்ணீர்பந்தல்புதூர், வாய்க்கால்புதூர், எல்லமடை ஆகிய கிராமங்களை செயல் எல்லையாகக் கொண்டு இப்பகுதி விவசாய பெருமக்களுக்கு சேவை செய்து வருகிறது. 

விவசாய கடன்

2016-2017 ஆம் ஆண்டில் கே.சி.சி. பயிர்கடன், விவசாய நகைக்கடன், மத்திய காலக்கடன், சரக்கீட்டுக்கடன் போன்றவகையான கடன்கள் ரூ. 23.87 இலட்சம் வழங்கியுள்ளது.  2960 உறுப்பினர்களைக் கொண்டு பங்குத்தொகையாக ரூ.22.04 இலட்சம் பெற்று வைத்துள்ளது.  இச்சங்கத்தின் மூலம் செயல்படும் 5 முழுநேர நியாய விலைக்கடை மற்றும் ஒரு பகுதி நேர நியாயவிலைக்கடை மூலம் 4100 குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று பயன்பெற்று வருகின்றனர். இச்சங்கத்தில் செயல்படும் பொதுசேவை மையம் மூலம் வருமானசான்று, இருப்பிடசான்று, சாதிச்சான்று, முதல்பட்டதாரிசான்று, கணவரால் கைவிடப்பட்டவர் சான்று போன்ற சான்றுகள் 2800 நபர்களுக்கு வழங்கி அதன் மூலம் ரூ. 1.40 இலட்சம் வருவாய் ஈட்டியுள்ளது. 

சேமிப்பு திட்டம்

இம்முகாமில் கோபிசெட்டிபாளையம் கூட்டுறவு சார்பதிவாளர் --கள அலுவலர் .கே.ஆர். விஐயகணேஷ்  கூட்டுறவுச் சங்கங்களில் வழங்கும் கடன்கள் மற்றும் சேமிப்பு திட்டங்கள் ஆகியன பற்றியும், ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் .மு.பா. பாலாஐp  கூட்டுறவு இயக்கத்தினால் ஏற்படும் நன்மைகள் பற்றியும்,  கூட்டுறவு பிரச்சார அலுவலர்  கோ. வெங்கடராமன்  கூட்டுறவுக் கொள்கைகள் மற்றும் அதன்வரலாறு பற்றியும், இப்கோ உர நிறுவன ஈரோடு கள அலுவலர் .எஸ். மாரியப்பன் இப்கோ உரத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பலன்கள் பற்றியும் சிறப்புரையாற்றினார்கள். மேலும் இம்முகாமில்  ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கோபி கிளை மேற்பார்வையாளர் .கே. விஸ்வநாதன் , சங்கத்தின் இயக்குனர் . வாசு , கூகலூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் .எஸ். மணி  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இம்முகாமில் இப்கோ நிறுவனம் மூலம் விவசாயிகளுக்கான கருத்தரங்கு மற்றும் மண் பரிசோதனை முகாமும் நடைபெற்றது. இதில் 75 விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.  விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மண் மாதிரிகள் இப்கோ உரநிறுவன ஹைதராபாத் மண்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி பேரூட்டசத்துக்கள் மற்றும் நுண்ஊட்டச்சத்துகள் எவ்வாறு உள்ளது என்று ஆராய்ந்து இலவசமாக தரச்சான்று வழங்கப்படும். இம்முகாமில் 4 நபர்களுக்கு விவசாய நகைக்கடன் ரூ. 5,98,000.00 –ம், 1 நபருக்கு விவசாயக்கடன் ரூ. 40,500.00-ம், 1 நபருக்கு சரக்கீட்டுக்கடன் ரூ.1,50,000.00-ம், 2 நபருக்கு கிணறு ஆழப்படுத்துதல் காரியத்திற்காக மத்தியகாலக்கடனாக ரூ. 1,96,000.00- ம், கறவைமாடு மத்தியகாலக் கடனாக 20 நபர்களுக்கு ரூ.7,20,000.00-ம் ஆக மொத்தம் 28 நபர்களுக்கு மொத்தம் ரூ. 17,04,5000.00 வழங்கப்பட்டது.

 முன்னதாக கூகலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்  பி. ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.  சங்கப்பணியாளர் .எம். ஈஸ்வரமூர்த்தி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்