முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாதவ் விவகாரம்: சர்வதேச கோர்ட்டில் இந்தியா- பாக். கடும் வாக்குவாதம்

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      உலகம்
Image Unavailable

ஹக், சர்வதேச கோர்ட்டில்  ஜாதவுக்கு தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரும் வழக்கில் நடந்த வாதத்தின்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

இந்திய கப்பல்படை முன்னாள் அதிகாரியாக இருந்த குல்புஷன் யாதவ், வியாபாரம் தொடர்பாக ஈரானுக்கு சென்றிருந்தார். அப்போது அவரை பாகிஸ்தான் நாட்டு உளவு படையினர் கடத்திக்கொண்டு சென்றுவிட்டனர். அதோடுமட்டுமல்லாது பாகிஸ்தானில் சதி மற்றும் நாசவேலையில் ஈடுபட்டதாக கூறி அவருக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு தூக்குத்தண்டனை விதித்துள்ளது. இது தொடர்பாக தூதரக ரீதியாக தொடர்புகொள்ள பாகிஸ்தான் மறுத்துவிட்டது. இதனையொட்டி ஜாதவுக்கு தூக்குத்தண்டனையை ரத்துச்செய்யக்கோரி சர்வதேச கோர்ட்டில் இந்தியா வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2 நாட்களாக விசாரணை நடந்தது. இந்திய தரப்பில் பிரபல வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதாடி வருகிறார். முதல் நாள் அவர் வாதாடுகையில் ஜாதவுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத்தண்டனையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரினார்.

2-வது நாளான நேற்றும் வாதம் நடைபெற்றது. அப்போது இந்திய வழக்கறிஞருக்கும் பாகிஸ்தான் வழக்கறிஞருக்கும் கடும் வாக்கு வாதம் நடைபெற்றது. ஜாதவுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய தரப்பில் கோரியதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஜாதவ் விவகாரத்தில் சர்வதேச கோர்ட்டை இந்தியா தவறுதலாக பயன்படுத்துகிறது என்று பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியது. அதேசமயத்தில் ஜாதவ் விவகாரத்தில் சரியானபடி விசாரணை நடத்தவில்லை என்றும் வியன்னா தீர்மானத்திற்கு எதிராக பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது என்றும் இந்தியா தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. அதனால் ஜாதவ் விவகாரத்தில் ஒரு இடைக்கால தீர்ப்பை வழங்க வேண்டும் என்று சர்வதேச கோர்ட்டை இந்தியா கேட்டுக்கொண்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விரைவில் இடைக்கால தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறினார்.

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் விமானம் ஒன்றை இந்தியா சுட்டு வீழ்த்தியது. இதுதொடர்பாக சர்வதேச கோர்ட்டில் பாகிஸ்தான் வழக்கு தொடர்ந்தது. அதன்பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது. விசாரணைக்கு முன்பே ஜாதவுக்கு எந்த நேரத்திலும் தூக்குத்தண்டனை விதிக்கப்படலாம். அதனால் விரைவாக தீர்ப்பு வழங்குமாறு சர்வதேச கோர்ட்டை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்