முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் தேர்தலுக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்பு இல்லை: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டம்

சனிக்கிழமை, 20 மே 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும், ரஷ்யாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த விவகாரத்தில் எனக்கு எதிராக நடத்தப்படும் விசாரணை சூன்ய வேட்டை போன்றது என அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நடந்தபோது, டொனால்டு டிரம்பை வெற்றிப் பெற செய்ய ரஷ்யா மறைமுகமாக காய்களை நகர்த்தியதாக குற்றச் சாட்டு எழுந்தது. இதனை டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு களை விசாரிப்பதற்காக முன்னாள் எப்.பி.ஐ இயக்குநர் ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில்  கொலம்பியா அதிபர் ஜூவன் மானுவேல் சான் டோஸுடன் இணைந்து டிரம்ப் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது இந்த விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பி னர். அதற்கு டிரம்ப் கூறியதாவது:

ரஷ்யர்கள்  பிரச்சாரம் செய்யவில்லை

எனக்காக ரஷ்யர்கள் யாரும் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. எனக்கு நானே பிரச்சாரம் மேற் கொண்டேன். இத்தகைய குற்றச் சாட்டுகள் நாட்டைப் பிளவுப்படுத் தும். புதிய ஆட்சியில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

எல்லையில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஐஎஸ் விவ காரத்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றி கிடைத்திருக் கிறது. அதைக் கவனியுங்கள்.  அமெரிக்க மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை செய் வதற்கு ஆயத்தமாக இருக்கிறேன். இந்த நாட்டை மீண்டும் நல்ல நிலைமைக்கு முன்னேற்றுவதே எனது நோக்கம். கடந்த 100 நாட்களில் பல விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

வரிகுறைப்பு தேவை

அதிபர் தேர்தலுக்கும், ரஷ்யா வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதை நம்புங்கள். இந்த விவகாரத்தை விசாரணை நடத்துவதற்காக அதிகாரி நிய மிக்கப்பட்டதை மதிக்கிறேன். அதே சமயம் அது சூன்ய வேட்டை போன்றது.  அமெரிக்காவுக்கு தற்போது மருத்துவ காப்பீடு, வரி குறைப்பு ஆகியவை தான் தேவை. நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வரி குறைப்பு இருக்கப் போகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago