முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிரிழந்த 13 போலீசார் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதி உதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சனிக்கிழமை, 20 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 13 போலீசார் குடும்பத்திற்கு தலா ரூ 3லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி.பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு,

மவுண்ட் காவல் நிலைய போக்குவரத்து பிரிவில், தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த அன்பு;திருவேற்காடு காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராகப்பணிபுரிந்து வந்த ரவி;ஆயுதப்படை-1, அ-நிறுமம், 6-ம் அணியில், காவலராகப் பணிபுரிந்து வந்த சண்முகத்தாய்;ராஜமங்கலம் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராகப் பணிபுரிந்துவந்த சதீஸ்குமார்;வட்டார மருத்துவமனை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப்பணிபுரிந்து வந்த செஞ்செழியன்;

பட்டாபிராம் காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த அஜீசுதீன்;கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்த மலைச்சாமி;மாங்காடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த முரளிதரன்;ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த அருள் முருகன்;சாத்தாங்காடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப்பணிபுரிந்து வந்த கற்பகமணி;நொளம்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த அரங்கநாதன்;சென்னை தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையில் சிறப்பு உதவிஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த தனசேகரன்;மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்துவந்த ஜான்கபாஸ்;ஆகிய சென்னை பெருநகர காவலர்கள் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த காவலர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ 3 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்