முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமராவதி அணை, திருமூர்த்தி அணை தூர் வாரும் பணிகள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெள்ளிக்கிழமை, 26 மே 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி  அணை தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி   முன்னிலையில்  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளாச்சித்துறை  அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்   நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குடிமராமத்து பணிகள்

மறைந்த  அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படும் தமிழக அரசு தமிழகத்தில் சரித்திர சாதனையாக குடிமராமரத்துப் பணிகளை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்  திருப்பூர் மாவட்டத்தில், உள்ள பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைப்புறம்போக்கு ஏரி, குளம் மற்றும் நீர்தேக்கங்களிலிருந்து விவசாயம், வீட்டு பொது உபயோகம் மற்றும் மண்பாண்டம் செய்தல் ஆகிய உபயோகங்களுக்காக வண்டல், சவுடு மண் மற்றும் கிராவல் ஆகியவற்றை எடுத்து பயன்படுத்திக்கொள்ள அரசாணை.50, தொழில் (எம்.எம்.சி1) துறை நாள் 27.04.2017-ன்படி தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதன்படி மாவட்டத்தில் அமைந்துள்ள 144 நீர்நிலைகளில் வண்டல் மண் மற்றும் சவுடு மண் ஆகியவற்றை விவசாய பயன்பாட்டிற்காக திருப்பூர் மாவட்ட விவசாயிகள்  எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக எடுத்து சென்று விவசாய நிலங்களில் பயன்படுத்தி உற்பத்தி திறன் மற்றும் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி விவசாய பெருங்குடி மக்களின் நீண்டநாள் கோரிக்கையின் பேரில் மழைக்காலங்களில்  மழை நீரினை முழுமையாக சேமிக்கும் வகையிலும், நீர் தங்கு தடையின்றி

16 நீர்நிலைகளில்

கிடைத்திடவும் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணை, திருமூர்த்தி அணை, நல்லதங்காள் ஓடை மற்றும் உப்பாறு அணை உட்பட அமராவதி கோட்டத்திற்கு உட்பட்ட 6 நீர்நிலைகளிலும் பவானிசாகர் கோட்டத்திற்கு உட்பட்ட 16 நீர்நிலைகளிலும், கிராம ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் மொத்தமாக 144 நீர்நிலைகளிலும் வண்டல்  மண் எடுக்கும் பணி துரிதமான முறையில் நடைபெற்று வருகிறது.  நேற்றைய நிலவரப்படி (25.05.2017) வரை 46628 கனமீட்டர் வண்டல் மண் அகற்றப்பட்டு இதன்மூலமாக மாவட்டத்தில் உள்ள 3687 விவசாய பெருமக்கள் பயனடைந்துள்ளனர்.  மேலும், உடுமலைப்பேட்டை வட்டம், திருமூர்த்தி அணையில் 9159 கனமீட்டரும் மற்றும் உடுமலைப்பேட்டையிலுள்ள 7 குளத்தில் 16327 கனமீட்டர் வண்டல்மண் எடுக்கப்பட்டு இதன் மூலம் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.  அமராவதி அணையிலிருந்து 4485 கனமீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். மாவட்டத்தில் அமைந்துள்ள அணை மற்றும் நீர்நிலைகளில் இலவசமாக வண்டல் மண் வழங்கப்பட்டு வருவதால் விவசாய பெருங்குடி மக்கள் இதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  தெரிவித்தார்கள்.  
            

இந்நிகழ்வின்போது, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் சாதனைக்குறள், உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் தயானந்தன், திருமூர்த்தி கோட்ட செயற்பொறியாளர் வி.ராஜு, உதவி செயற்பொறியாளர் தனராஜ், இளம்பொறியாளர் சரவணன் , அமராவதி அணை கோட்ட பொறியாளர் தர்மலிங்கம், உதவி செயற்பொறியாளர் தருமன், உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியம் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.               

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து