முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வில் 99.6 சதவீதம் : நொய்டா மாணவி ரக்ஷா கோபால் முதலிடம் - பிரகாஷ் ஜவடேகர் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : சி.பி.எஸ்.இ பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 99.6 சதவீதம் மதிப்பெண் பெற்று நொய்டா மாணவி ரக்ஷா கோபால் முதலிடம் பிடித்துள்ளார்.

சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்ச்சி விகிதம் 83.05சதவீதத்திலிருந்து 82சதவீதம்  ஆக குறைந்துள்ளது. அதிக சதவீதம் எடுத்த மாணவர்கள் விவரம்:

ரக்ஷா கோபால்: அமிட்டி இண்டெர்னேஷனல், நொய்டா - 99.6சதவீதம்,  பூமி சவந்த்: டிஏவி செக்டார், சண்டிகர் 8 - 99.4சதவீதம் , ஆதித்யா ஜெயின் பவன் வித்யா மந்திர், சண்டிகர் - 99.2சதவீதம் . சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 9-ந்தேதி தொடங்கி, ஏப்ரல் 29-ந்தேதி முடிவடைந்தது. இந்தியா முழுவதும் 11 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழகத்தில் மட்டும் 15 ஆயிரத்து 450 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.தேர்வு முடிந்த நிலையில் எப்போது முடிவு வெளியாகும் என்று மாணவ-மாணவிகள் ஆர்வம் காட்டி வந்தனர். இந்தநிலையில் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று இணையதளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முதல் 3 இடங்களில் வந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து