லட்சுமி கடாட்சம் பெற 75 வழிகள்.....

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2017      ஆன்மிகம்
Lakshmi

Source: provided

சுக்ரஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும். சுக்ரஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும். பசும்பாலை சுக்ரஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும். அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமை வரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11 தீபமும். 11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும்.

ஐஸ்வர்யம் தூப பொடியுடன் துளசிபொடியுடன் சேர்த்து அவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும். வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்சிக்க தனலாபம் கிட்டும். வெள்ளிகிழமை காலை சுக்ரஓரையில் சுக்ரன், மகாலட்சுமி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33 வாரம் வழிபடசெல்வம் கிடைக்கும்.

கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும். யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ரதிசை தான். வெள்ளிக்கிழமை சுக்ரஓரையில் மொச்சை, சுண்டலை மகாலட்சுமிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்துவர குடும்பத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும். வியாழக்கிழமை குபேர காலத்தில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேரனை வழிபட பணம் வரும். தனபண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றி கிடைக்கும். ஸ்ரீ லஷ்மிகுபேரசதநாம ஸ்தோத்திரத்தினை தீப தூப ஆராதனையோடு கூறிவர அஷ்ட தரித்திரம் நீங்கி தனலாபம் பெறலாம்.

வீடடில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும். மகாலட்சுமிக்கும் தன பண்டார குபேரருக்கும்  திரிதளவில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை அணிவித்திட பணம் குவியும். குபேரனுக்கு தாமரைதிரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும்.

இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வு வாழ பணம் கிடைக்கும். ஓவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.  தொடர்ந்து 11 பௌர்ணமி அன்று இரவு 8.30 மணிக்கு சொர்ணா கர்ஷன பைரவருக்கு தாமரை மாலை அணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபட சொர்ண ஆகர்ஷணமாகும். வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.

ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபட செல்வம் பெருகும். தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12 மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம். பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம். செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர் முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம் பெருகும்.

செல்வத்திற்கு உரியவர் மகாலட்சுமி வெள்ளிக்கிழமை தினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை வழிபாட்டால் பணம் கிடைக்கும். வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்து மஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து வழிபட, சகல தோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில் முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்த அளவின் மடங்குகள் பணம் வரும்.

குலதெய்வ வழிபாடும்  பித்ருக்கள் வழிபாடும் இடைவிடாமல் செய்துவர குடும்ப முன்னேற்றம் ஏற்படும். வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன் வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட லஷ்மி அருள் பரிபூரணமாக கிட்டும். நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும், இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பணவரவு ஏற்படும்.

இறைபக்தியில் இருப்பவர்களிடம் ஆசி பெறுவது புண்ய பலம் கூடும். பணவரவு அதிகரிக்கும். பகலின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும். 45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும். தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும். குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும்.

சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லட்சுமி மந்திரம் கூறியபடி தெளித்திட செல்வம் சேரும். மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும், தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும். சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம் கிட்டும். ஐஸ்வர்யலட்சுமி படத்தினில் வாசனை திரவியம் தடவி பணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும். வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்க செல்வம் சேரும்.

பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகல செல்வங்களும் வசமாகும். ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்துவர பணம் ஆகர்ஷணமாகும். ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம் அடிக்கடி பார்க்க பணம் வரும். பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும். வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும். மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்புநிற வஸ்திரம் சாத்தி வழிபட வசிய முண்டாகி செல்வவரத்து உண்டாகும்.

பச்சைபட்டு உடுத்திய லட்சுமி படத்தினை வாசலில் மாட்டி தினமும் தூபம் காட்டிவர அஷ்ட ஐஸ்வர்யங்களும் வசமாகும். மகாலட்சுமிக்கு பச்சை பட்டினை அணிவித்து வணங்க பணம் வரும். வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லட்சுமி கடாட்சம் ஏற்படும். தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம் நிலையாக தங்கும். சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட, தொடர்ந்து 9 வாரம் செய்துவர குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு அணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும் அணிந்து வர பணம் வரும். அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும். முழுபாசிப்பருப்பை வெல்லம் கலந்த நீரில் ஊறவைத்து பின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்கு அளித்திடவும். இதனை தொடர்ந்து செய்துவர பணத்தடை நீங்கும்.

பாசிப்பருப்பை ஒரு பச்சைபையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒரு பிளாடிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும். பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும். தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லட்சுமி நித்தமும் வாசம் செய்வாள்.

குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு, நெல்லிமரம், வில்வமரம் இருக்க அந்த வீட்டில் லட்சுமிகடாட்சம் ஏற்படும். வீட்டில் தலைவாசல் படியில் கஜலட்சுமி உருவத்தை வெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். மகாலட்சுமியை கனக தாரா ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும். சொர்ணாகர்ஷண பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர் பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.

கோவிலில் லட்சுமி மீது வைத்த தாமரை மலரைக் கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்து பணப்பெட்டியில் வைக்க பணம் சேரும். ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு அணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும் அணிந்து வர பணம் வரும். தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திர சாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும். கற்பகவிநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து வணங்க தொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.

தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்தபாராயணத்தை வேத பண்டிதர்களை கொண்டு செய்ய லட்சுமிகடாட்சம் நிரந்தரமாகும். துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும். சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தன வீரபத்ரன், சொர்ணகாளி, சொர்ணவராகி இவைகளை வழிபட தங்க நகை கிடைக்கும். கனகதாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டுவர பணம் கிடைக்கும்.

தங்கநகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில் காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும். சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனை அன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்கு நம்மிடம் வந்து சேரும். திருமலை வெங்டகடாஜலபதிக்கு வெண் பட்டு அணிவித்து வழிபட செல்வம் சேரும்.  செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபட பணம் கிடைக்கும்.

சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடி கணக்கில் பணம் கிடைக்கும். ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபட பூமி லாபமும், செல்வ வளம் கிட்டும். திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி படம் வைத்து வழிபட பணம் வரும்.
 

Kaatrin Mozhi Review | Jyothika | Vidharth | Lakshmi Manchu | Radha Mohan

Vanaraja Chicken | How to Start Vanaraja Chicken farming | வனராஜா வகை நாட்டுக்கோழி வளர்ப்பு சுலபமா

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து