எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பேசிய நயினார் நாகேந்திரனுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்," திரிஷா குறித்து அவதூறாக பேசியதற்கு குஷ்பு கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது" என்றார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் முன்னெடுப்பாக சேலத்தில் த.வெ.க. தலைவர் விஜய், சீலநாயக்கன்பட்டி அருகே தாளமுத்து பகுதியில் த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய விஜய், "என்னை வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்கள்; என் வீடு எது தெரியுமா? தமிழ்நாடுதான் என் வீடு. 8 கோடி தமிழக மக்களும் தான் என் குடும்பம். அவர்களுடன் முதல் படை வீரனாக நிற்பதே எனது குறிக்கோள். நான் வாக்கு கேட்க வரவில்லை. மக்களுக்காக நீதி கேட்க வந்துள்ளேன். மற்ற கட்சிகளுக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகின்ற நிலையில் எனக்கு தடைகள் விதிக்கப்படுகிறது. கூட்டணிகளை மட்டும் நம்பி இருக்கக் கூடிய 50, 70 வருட கட்சினு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை மீறி, இன்றைக்கு களத்தில் தமிழகத்தில் 30 சதவீத வாக்கு வங்கியுடன் முதன்மை சக்தியாக த.வெ.க. உள்ளது" என்றார்.
விஜய்யின் இக்கருத்திற்கு பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிக்கையாளர்களுடன் பேசும்போது, "அரசியலில் பாவம் அவருக்கு அனுபவம் இல்லை. முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். திரிஷாவை விட்டு வெளியே வரவேண்டும். வெளியே வந்தால் தான் என்ன நடக்கிறது என்பது தெரியும்" என்றார்.
கடந்த 2023-ம் ஆண்டு குஷ்பூ குறித்து தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதற்கு, தற்போது பாஜகவில் உள்ள குஷ்பு கொதித்தெழுந்து பெண்களை பற்றி தவறாக பேச யாருக்கும் தைரியம் வரக்கூடாது வந்தால் அடிப்போம் என்றார். ஆனால் இது குறித்து அவர் கண்டனம் தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. அதே நேரம் கனிமொழி எம்பி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். பெண்களுக்கு உரிய மரியாதையையும், அவர்களுக்கான சமூக அந்தஸ்தையும் கொடுப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


