Idhayam Matrimony

மறுதணிக்கை செய்வதில் தாமதம்: ஜூன் மாதம் ஜனநாயகன் வெளியீடு?

ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2026      சினிமா
Jana-Nayagan

சென்னை, மறுதணிக்கைக்காக ஜன நாயகன் அனுப்பப்பட்ட நிலையில் திரைப்படத்தை தணிக்கை வாரியம் இன்னமும் மறுதணிக்கைக்காக திரைப்படத்தைப் பார்க்காததால் படம் ஜூன் மாதம் அதாவது தேர்தலுக்கு பிறகு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஜன நாயகன் திரைப்படம் பொங்கலையொட்டி ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், சில காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சான்றிதழ் வழங்குவதை தணிக்கை வாரியம் நிறுத்தி வைத்தது. இதனைத் தொடர்ந்து சென்னை உயா் நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தது.

வழக்கு விசாரணைகள் நடைபெற்று இறுதியில் தணிக்கை வாரியத்துக்குச் சாதகமாகவே தீர்ப்பளிக்கப்பட்டது. அதனால், ஜன நாயகன் திரைப்படத்தை மறுதணிக்கை செய்ய முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் உள்ள வழக்கை திரும்பப் பெறுவதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், பிப். 20-ம் தேதி வெளியீடாக ஜன நாயகன் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தணிக்கை வாரியம் இன்னமும் மறுதணிக்கைக்காக திரைப்படத்தைப் பார்க்கவில்லையாம். இதனால், இப்படம் தேர்தலுக்கு பின்பே வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதம் விஜய் பிறந்த நாள் என்பதால் அம்மாதம் படம் வெளியிடப்படலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து