முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

புதன்கிழமை, 7 ஜூன் 2017      தேனி
Image Unavailable

தேனி.-தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சித்துறை அலுவலர்கள் மற்றும் வீட்டு மனை விற்பனையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,   தலைமையில் நடைபெற்றது.
  கூட்டத்திற்குபின் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிப்பகுதிகளில் உள்ள அனைத்து இடங்களிலும் நகர் ஊரமைப்பு துறையால் மனைப்பிரிவு அனுமதி பெறாமல், அனுமதியற்ற மனைப்பிரிவுகள் அமைக்கப்பட்டு, மனைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள், சாலை வசதிகள், பொது இடங்களான பூங்கா, திறவிடம் மற்றும் சிறுவர் விளையாடுமிடும் அனைத்தும் சரியான வகையில் அமைத்து தருவதற்கும், மனை பிரிவுகளை அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வருவாய் இழப்பீட்டினை தவிர்த்திடவும் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை சீர்படுத்தி ஆறு மாத காலத்திற்குள் வரன் முறைப்படுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
  அதனடிப்படையில், மாவட்டத்திலுள்ள அனுமதியற்ற மனைபிரிவுகளை வைத் ்கும் பொது மக்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மற்றும் வீட்டு மனை விற்பனையாளர்கள் உடனடியாக அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைபடுத்துவது தெடர்பாக மாவட்டத்திலுள்ள சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலர்களை தொடர்பு கொண்டு அரசு கொடுத்துள்ள காலகெடுவிற்குள் வரன்முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு வரன்முறைப்படுத்தப்பட்ட மனைகளுக்கு மட்டுமே குடிநீர் வசதி, மின் வசதி, கழிவுநீர் ஓடை வசதி போன்ற வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். மேலும், முறைப்படுத்தப்பட்ட மனைகளை மட்டுமே மறு பதிவு செய்திட இயலும். எனவே, பொதுமக்கள், வீட்டுமனை விற்பனையாளர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு அனுமதியற்ற மனைகளை வரன்முறைப் படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,  தெரிவித்தார்.
  இக்கூட்டத்தில், மதுரை மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் (பொ)  முகம்மது அலி   மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  ஞானசேகரன்   உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்)  சேதுராமன்   உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)  தி.அபிதாஹனீப்   நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து