காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் அரசினர் பள்ளியில் மாணாக்கர்களுக்கு சீருடை, பாடநூல் நோட்டுப்புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களை மாவட்ட கலெக்டர்பா.பொன்னையா வழங்கினார்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      காஞ்சிபுரம்
kanchipuram 2017 06 08

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆணைக்கிணங்க, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட மாணாக்கர்களுக்கு சீருடை, பாடநூல், நோடடுப்புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களை ஆற்காடு நாராயணசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளி மற்றும் வாலாஜாபாத் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணாக்கர்களுக்கு மாவட்ட கலெக்டர்பா.பொன்னையா வழங்கினார்

 நோட், புத்தகங்கள்

இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா கல்வித்துறையில் மிகுந்த அக்கறை கொண்டு மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள். அதில் மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் இந்திய நாட்டில் மற்ற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் முன்னோடி திட்டமாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,03,403 மாணாக்கர்களுக்கு சீருடைகளும், 5,77,280 பேருக்கு புத்தகப்பைகளும், 7,83,805 பேருக்கு பாடநூல்களும் 15,15,264 பேருக்கு நோட்டுப்புத்தகங்களும் 38,777 பேருக்கு கணித உபகரணப் பெட்டிகளும் 42,267 பேருக்கு வண்ண பென்சில்களும் 2,76,608 பேருக்கு காலணிகளும் வழங்கப்படவுள்ளன.

இதுமட்டுமின்றி, மாணாக்கர்களுக்கு சத்துணவும் வழங்கப்படுகிறது. மாணாக்கர்கள் தமிழக அரசின் இந்த நலத்திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு ஆசிரியர்களின் அறிவுரையை பின்பற்றி மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியை பெறுவதற்கு ஆசிரியர்களும் மாணவர்களை தயார் செய்ய வேண்டும். மாணாக்கர்களும் தங்கள் 100 சதவீத மதிப்பெண்களை பெறுவதற்கு உறுதிமேற்கொண்டு செயல்பட வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம்குமரவேல், சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வாலாஜாபாத்பா.கணேசன், வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் தும்பவனம் ஜீவானந்தம், வரதராஜீலு, ஆகியோர் கலந்துகொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து