லண்டன் மசூதி அருகே தாறுமாறாக ஓடிய வாகனம் மோதி ஒருவர் பலி

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      உலகம்
london modque 2017 6 19

லண்டன் : இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மசூதி ஒன்றின் அருகே நேற்று அதிகாலை தாறுமாறாக ஓடிய வாகனம் மோதியதில் ஒருவர் பலியானார். 8 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

லண்டன் பின்ஸ்பரி பார்க் மசூதி அருகே தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்தவர்களை குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இத்தாக்குதல் தொடர்பாக பிரிட்டன் முஸ்லிம் கவுன்சில் தனது ட்விட்டர் பக்கத்தில் பின்ஸ்பரிபார்க்மசூதி என்ற ஷேஷ்டேகின் கீழ், "தொழுகை முடித்துவிட்டு வந்தவர்களை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்" எனத் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து