முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூத்தன்கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டிடம் எம்.எல்.ஏ.கே.ஏ.பாண்டியன் திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      கடலூர்
Image Unavailable

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தின் கூத்தன் கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் மற்றும் சமையல் கூடங்களை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் திறந்துவைத்தார்.

 திறப்பு விழா

நிகழ்ச்சிக்கு குமராட்சி ஒன்றிய மாவட்ட கழக பிரதிநிதி செல்வகணபதி தலைமை தாங்கினார். உதவி செயற் பொறியாளர் பாலசுப்பிரமணியன், சிதம்பரம் நகர கழக செயலாளர் ஆர்.செந்தில்குமார், பரங்கிப்பேட்டை ஒன்றிய கழக அவைத்தலைவர் கோ.வி.ராசாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமராட்சி ஒன்றிய உதவி செயற் பொறியாளர் விஜயரகுநாத் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் கலந்துகொண்டு புதிய பள்ளி கட்டிடத்தினையும் மற்றும் சமையல் கூடத்தினையும் திறந்து வைத்து பேசுகையில்,

வலியுறுத்தினேன்

சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூத்தன்கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. அதனை மாற்றி புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்ற கிராம மக்களாகிய உங்களின் கோரிக்கையினை சம்பந்தபட்ட அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிககளை தொடர்ப்பு கொண்டு புதிய கட்டிடம் தேவை என்பதனை தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். அதன் தொடர்ச்சியாக  அம்மா அவர்களின் அரசு கூத்தன்கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கி புதிய பள்ளி கட்டிடம் மற்றும் சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு பெஞ்ச் டெஸ்க் போன்றவை வேண்டும் என்று தற்போது என்ன்னிடம் பள்ளியின் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர். அதை விரைவில் எந்து சட்டமன்ற உறுப்பினர் நிதியில் விரைவில் இருந்து வழங்கப்படும். மேலும் பொதுமக்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்றார்.

பலர் பங்கேற்பு

நிகழ்ச்சியில் ஒன்றிய கழக பொருளாளர் கோவிந்தராசு, ஊராட்சி செயலாளர் செல்வம், புவனகிரி ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன், நிர்வாகிகள் சண்முகம், அன்பழகன், முருகன், கென்னடி, பன்னீர்செல்வம், சுமதி,முத்து, சுந்தர், மாரிமுத்து, கனேஷ், கோதண்டம் மற்றும் ஊராட்சி ஒன்றிய மேற்பார்வையாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் ஊர் பொது மக்கள் பள்ளி மாணவர்கள் ஆசிரியர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து