முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய வங்கிகளுக்கு 30 நாள் அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதன்கிழமை, 21 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

மும்பை, மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய வங்கிகளுக்கும், அஞ்சல் அலுவலகங்களுக்கும் மேலும் 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு அறிவித்துள்ளது.

இத்துடன் அவகாசம் அளிக்கப்பட்ட காலத்தில் பணத்தை டெபாசிட் செய்யாதது ஏன் என்று விளக்கம் அளிக்குமாறும் ரிசர்வ் வங்கி கோரியுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது  ,

 ''அனைத்து வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் தங்கள் வாடிக்கையாளர்களிடம் டிசம்பர் 30, 2016-க்கு முன்னதாகப் பெற்றுக்கொண்ட மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளையும், நவம்பர் 10 முதல் 14, 2016 வரையிலான காலகட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் பெற்றுக்கொண்ட மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கியின் எந்த அலுவலகத்தில் வேண்டுமானாலும் 30 நாட்களுக்கு உள்ளாக டெபாசிட் செய்யலாம்.

முன்னதாக அவகாசம் அளிக்கப்பட்ட டெபாசிட் காலத்தில் பணத்தை டெபாசிட் செய்யாதது ஏன் என்பது குறித்த சரியான காரணங்களைக் கூறினால் மட்டுமே இது பொருந்தும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து