முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் கவர்னராக இருந்தபோது அனுமதி மறுத்த ஓய்வு மாளிகை தற்போது வரவேற்க காத்திருக்கிறது

புதன்கிழமை, 21 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

சிம்லா  : பா.ஜ.க சார்பில் ஜனாதிபதி வேட்பாளரராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த், கடந்த மாதம் சிம்லா வந்தார். இங்கு ஜனாதிபதி ஓய்வு மாளிகையில் தங்க விரும்பிய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இமாச்ச லபிரதேச தலைநகர் சிம்லாவில் ‘பிரசிடென்சியல் எஸ்டேட்’ உள்ளது. இங்கு குடியரசுத் தலைவர் ஆண்டுக்கு ஒருமுறை தங்கி ஓய்வெடுப்பது வழக்கம். அப்போது முக்கிய அலுவல்களைக்  ஜனாதிபதி இங்கிருந்து கவனிப்பார் என்பதால், அது தொடர்பான அலுவலகமும் இடம் மாறுவது வழக்கம். பசுமையான மஷோப்ரா மலையில் உள்ள இந்த எஸ்டேட் அதிக பாதுகாப்பு கொண்டதாகும்.

இந்நிலையில் பிகார் கவர்னரான ராம்நாத் கோவிந்த், கடந்த மே 28-ம் தேதி தனது குடும்பத்துடன் சிம்லா வந்துள்ளார். சிம்லா மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களுக்கு அவர்கள் சென்றுள்ளனர். அப்போது பிரசிடென்சியல் எஸ்டேட்டில் உள்ள கட்டிடத்தில் தங்குவதற்கு ராம்நாத் கோவிந்த் விரும்பினார். ஆனால் தேவையான முன் அனுமதி பெறவில்லை என்று அவரை அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

இந்நிலையில் அவர் ஜனாதிபதியாக  தேர்வு செய்யப்பட்டால் இந்த ஆண்டு கோடையில் அவரை வரவேற்க ஓய்வு மாளிகை தயாராக இருக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து