கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பதனீரின் மருத்துவ குணங்கள்

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      மருத்துவ பூமி
bathaneer

Source: provided

வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் போது உடலுக்கும் குளிர்ச்சியும், மனதிற்கு புத்துணர்ச்சியும் தந்திடும் பதனீரின் மருத்துவ குணங்களை இப்போது பார்ப்போம் :

பதநீரின் மருத்துவ குணங்கள் : நம் நாட்டில் பெரிய அளவில், இதை உற்பத்தி செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்தினால் தன் செயல்பாடுகள் அளப்பரியது பல்வேறு நோய்களை நீக்கவல்லது எனலாம். இந்த பதநீரிலும், பனை வெல்லத்திலும் எல்லாவித ஊட்டசத்தும் உள்ளது என கண்டு அறிந்திரு்கிறார்கள்.

தொழு நோயை நீக்கும் பதநீர் : நாளும் ஒரே பனை மரத்தில் ,இருந்து பதநீர் ,இறக்கி காலை ,மாலை அருந்தி பனைஓலைப்பாயில் படுத்து பனைவிசிரியியை பயன்படுத்தி பனைஓலையில் உணவு உண்டு பனைஓலை குடுசையில் 96 நாள்கள் தாங்கி ,இருந்தால் தொழு நோய் நீங்கும் என ஒருமருத்துவக் குறிப்பு உள்ளது. பண்டை காலத்தில் தொழுநோயை அறவே நீக்கிட நம் முன்னோர்கள் மேற்கொண்ட எளிமையான வழி ,துவே.

மாதவிடாய் பிரச்சனை:  மாதவிடாய் தடைபட்டு அதனால் கருப்பை சார்ந்த வலி. வாய்வு, காட்டி முதலியவற்றினால் பெண்கள் அவதிபடுவார்கள் அது மட்டும் அல்லாமல் ,இந்த காலத்தில் மார்பகுதி பருத்து ஒருவிதமான சன்னி நோய்போல உண்டாகும், இந்த நோய்களுக்கு பனையின் குருத்தையும் அதன் உள்பகுதியை உட்கொண்டால் மாதவிடாய் சிக்கலின்றி வெளியேறி பிரச்சனைகள் நீங்கிடும்.

ரத்த கடுப்பு : வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை, மாலை இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர, ரத்த கடுப்பு. மூல சூடு தணியும். அதேபோல மஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண், வெப்ப கழிச்சல், சீத கழிச்சல் நீங்கும் .

பதநீரிலுள்ள சத்துக்கள் :  ஒரு மட்டை( 250 மிலி ) பதநீரில் உள்ள சத்துகள் :

1. சக்கரை 28 .8 கிராம்

2. காரம் 7 .௨ கிராம்

3. சுண்ணாம்பு சத்து 35 .4 மி.கிராம்

4. ,இரும்பு சத்து 5 .5 மி.கிராம்

5. பாசுபரசு 32 .4 மி.கிராம்

6. தயமின் 82 .3 மி.கிராம்

7. ரிபோபிலவின் 44 .5 மி.கிராம்

8. அசுகர்பிக் அமிலம் 12 .2 மி.கிராம்

9. நிகோடினிக் அமிலம் 674 .1 மி.கிராம்

10. புரதம் 49 .7 மி.கிராம்

11. கலோரிகள் 113 .3 மி.கிராம்

இதில் நார்சத்து மிகுந்தால் பெண்களின் கருக்காலத்தில் உண்டாகும் மலச்சிக்கலை நீக்குகிறது. இதில் உள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகளை வலுபடுத்துகிறது.

பாலுணர்வை அதிகரிக்க :  இதில் இயல்பாகவே அனைத்து சத்துகளும் நிரம்பி, இருப்பதால் பாலுணர்வை கூட்டுகிறது என்கிற மருத்துவ குரிப்புகளும் காண கிடைக்கிறது சித்த மருத்துவம் என்பது வரட்டுத்தனமான கோட்பாடுகளை கொண்டிருக்கவில்லை. இதில் முறையான அறிவியல் ஆய்வுகள் கொட்டிகிடப்பதால் நம் மக்கள் விழித்தெழுந்து நம் பாரம்பரிய மருத்துவத்தை மீட்டு பயன்படுத்திட வேண்டும்.

உடல் குளிர்ச்சிக்கு பதநீர் :  பனை மரத்தில் கிடைக்கும் பதநீரை பனை மர ஓலையில் ஊற்றி அதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே தனிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும்கூட ,ந்த பானம் தாகத்தை தீர்த்து உடலுக்கு குளிமையை ஏற்படுத்தி  வலிமையை சேர்க்கும் அளவுக்கு ஆற்றல் படைத்தது.

மேலும் இந்த பதநீரையும் நுங்கையும் கலந்து குடித்தால் முகத்தை அழகுற வைக்கவும் மூளை சுறுசுறுப்பாக, இயங்கவும் கண் பார்வை அதிகரிக்கவும் செய்கிறது. சிறு குழந்தைகளுக்கு நுங்குகளை சிறிதாக நசுக்கி கொடுக்க வேண்டும் அப்போது தான் எளிதில் ஜீரணமாகும்.

Kaatrin Mozhi Review | Jyothika | Vidharth | Lakshmi Manchu | Radha Mohan

Vanaraja Chicken | How to Start Vanaraja Chicken farming | வனராஜா வகை நாட்டுக்கோழி வளர்ப்பு சுலபமா

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து