Idhayam Matrimony

2வது டி-20-யில் அபார வெற்றி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2025      விளையாட்டு
Eng 2025-06-28

Source: provided

மான்செஸ்டர் : 2-வது டி-20 போட்டியில் ஜோஸ் பட்லர் மற்றும் பிலிப் சால்ட்டின் அபார பேட்டிங்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.

பந்து வீச்சு தேர்வு...

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார்.

ஜோஸ் பட்லர் 83 ரன்...

முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோஸ் பட்லர் 83 ரன்னில் வெளியேறினார். அவர் 30 பந்தில் 7 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்தார். ஹாரி புரூக் 41 ரன்கள் எடுத்தார். பெத்தேல் 26 ரன்னில் அவுட்டானார்.

305 ரன்கள் இலக்கு...

இதையடுத்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. கேப்டன் மார்கிரம் மட்டும் அதிரடியாக ஆடி 41 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

146 ரன்கள் வித்தியாசம்...

இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 16.1 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலையில் உள்ளன. இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், லியாம் டாசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து