Idhayam Matrimony

அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2025      இந்தியா
Income-tax 2

Source: provided

மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்ட நிலையில், வருமான வரிக் கணக்குகளை அபராதம் இன்றி தாக்கல் செய்ய இன்று (திங்கள்கிழமை-செப்.15) கடைசி நாளாகும்.

இதுகுறித்து வருமான வரித் துறை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்காக வரி செலுத்துவோா் மற்றும் வரி கணக்கீட்டு நிபுணா்களுக்கு நன்றி. கணக்கு தாக்கல் தொடா்ந்து வருகிறது.

வருமான வரிக் கணக்கு தாக்கல், வரி செலுத்துதல் மற்றும் பிற சேவைகளில் வரி செலுத்துவோருக்கு உதவ, 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. தொலைபேசி அழைப்புகள், எக்ஸ் வலைதளங்கள் மூலமும் வரி செலுத்துவோரின் சந்தேகங்களை வருமான வரித் துறை தீா்த்து வருகிறது. இதுவரை கணக்கு தாக்கல் செய்யாதவா்கள், கடைசி நேர நெரிசலைத் தவிா்க்கும் வகையில் முன்கூட்டியே தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான (2024-25 நிதியாண்டில் ஈட்டிய வருவாய்க்கான கணக்கு) கணக்கு தாக்கலுக்கான கடைசித் தேதி ஜூலை 31 என்றபோதும், ஐடிஆா் படிவத்தில் மேற்கொண்ட சில மாற்றங்கள் காரணமாக கால அபராதம் இன்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை செப்டம்பா் 15 வரை நீட்டித்து வருமான வரித் துறை கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது. வருமான வரிக் கணக்கு தாக்கல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்துள்ளது. 2023-24 நிதியாண்டில் கணக்கு தாக்கல் 6.77 கோடியாக இருந்தது, 2024-25 நிதியாண்டில் 7.28 கோடியாக உயா்ந்தது. இது, 7.5 சதவீத வளா்ச்சியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து