எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (செப். 14) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக ஓசூர் விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்திலிருந்து விழா நடைபெறும் இடத்திற்கு செல்லும் வழியில் ஓசூர், சூளகிரி, குந்தாரப்பள்ளி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதல்வர் நடந்து சென்று, சாலையின் இருமருங்கிலும் ஏராளமான பெண்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டு, அவர்களுடன் சுயபடம் எடுத்துக் கொண்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் முதல்வர் பெற்றுக் கொண்டு, அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். முதல்வர் பேசுகையில்,
1) அஞ்செட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும்.
2) கெலமங்களத்தில் ரூ. 12 கோடியில் சாலைகள் அமைக்கப்படும்.
3) ஒசூரில் எல்சி 104 ரயில்வே கேட் பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.
4) கெலமங்களம் பகுதியில் புறவழிச்சாலை அமைக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
5) ஒசூர் மாநகரில் NH 44, 844 சாலைகளை இணைக்க புதிய சாலை அமைக்க புதிய சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


