முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதிராஜன் இயக்கும் “ அருவா சண்ட “ மாளவிகா மேனன் நாயகி

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

தமிழ் திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் படமான “ சிலந்தி “ படத்தை எழுதி இயக்கி வெற்றி பெற்றதன் மூலம் டிஜிட்டல் சினிமா மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்திய இயக்குனர் ஆதிராஜன் தற்போதுஒரு கபடி வீரனின் காதல் கதையை, கௌரவக் கொலை சம்பவங்களின் பின்னணியில் எழுதி இயக்கி வருகிறார்.

இதில் கபடி வீரர் ராஜா கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடிக்கிறார்.இவர் பிரம்மா படத்தில் சசிகுமார் தங்கையாகவும் இவன் வேற மாதிரி படத்தில் நாயகி சுரபியின் தங்கையாகவும் விழா படத்தில் நாயகியாகவும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் ஐந்து படங்களின் நாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மேனன் தற்போது தெலுங்கில் இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.அருவாசண்டை படத்தின் கதையை கேட்டதும் அசந்து விட்டேன்.

குறிப்பாக இயக்குனர் ஆதி சார் கிளைமாக்ஸ் காட்சியை விவரித்த போது என்னை அறியாமல் கண் கலங்கிவிட்டேன். இந்த படம் தமிழ் திரையுலகில் எனக்கு ஒரு வலுவான அஸ்திவாரத்தை அமைத்து தரும். பெரிய ஹீரோயின்களுக்கு அமைவது போல எனக்கான அறிமுக பாடல் காட்சியும் இருப்பதால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

இந்த படத்திற்கு பிறகு தமிழில் நான் பிஸியான நாயகியாக ஆகிவிடுவேன். என்று உற்சாகம் பொங்க சொன்னார் மாளவிகா மேனன்.ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு தரண் இசையமைக்க கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதிகிறார். வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை ஏ.டி.ஜெ, ஸ்டன்ட் மிரட்டல் செல்வம், நடனம் சிவசங்கர், தீனா தயாரிப்பு மேற்பார்வை ; சங்கர் ஜி. டிசைன்ஸ் சபீர் மக்கள் தொடர்பு மௌனம்ரவி .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து