முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1.9 கி.மீ நீள பீட்சா செய்து அமெரிக்காவில் கின்னஸ் சாதனை

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

கலிபோர்னியா, அமெரிக்காவில் 1.9 கி.மீ. நீளத்துக்கு பீட்சா செய்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

தற்போது பிரபலமாக இருக் கும் ‘பீட்சா’ இத்தாலி நாட்டில் தான் முதன்முதலாக கண்டுபிடிக் கப்பட்டது. தற்போது உலகம் எங்கிலும் பீட்சா உணவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இத்தாலியில்தான் 1,853.88 மீட்டர் நீளத்துக்கு மிக பிரம்மாண்டமான பீட்சா செய்து சாதனை படைத்தனர்.  அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் 1,930.39 மீட்டர் நீளத்துக்கு (1.93 கி.மீ.) சமையல் கலைஞர்கள் மிக பிரம்மாண்டமான பீட்சா செய்து அசத்தி உள்ளனர். இதை உருவாக்க தன்னார்வலர்கள் பலர் உதவி செய்துள்ளனர். இது உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

உணவு தயாரிப்பு இயந்திரங் களை உற்பத்தி செய்து ரெஸ்டாரன்டுகளுக்கு விற்கும் ‘Pizzaovens.com’ என்ற அமெரிக்க நிறுவனம் இந்த பிரம்மாண்டமான பீட்சாவை செய்து முடித்துள்ளது. இதை செய்வதற்கு 3,632 கிலோ மாவு, 1,634 கிலோ உறைபாலேடு (சீஸ்), 2,542 கிலோ தக்காளி சாறு (சாஸ்) ஆகியவற்றை சமையல் கலைஞர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

இந்த பீட்சாவை உருவாக்க உணவுவிடுதிகளில் பயன்படுத்தும் 3 மிகப்பெரிய ஓவன்களைப் பயன்படுத்தி உள்ளனர். மேலும், கன்வேயர் பெல்ட் மூலம் பீட்சாவுக்குத் தேவையான மாவை பரப்பி உள்ளனர். மாவு தீய்ந்து விடாதபடி ஒவ்வொரு 17 நிமிடங்களுக்கும் ஓவன்களை இடம் மாற்றி சமைத்தனர். மொத்தம் 8 மணி நேரத்தில் சமையல் கலைஞர்கள் பிரம்மாண்ட பீட்சாவை உருவாக்கினர் என்று கின்னஸ் சாதனை புத்தக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கடைசியில் பீட்சாவை துண்டு களாக்கி உள்ளூர் உணவு வங்கி கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங் களுக்கு வழங்கப்பட்டது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து