ஐந்துக்கு முன் உள்ள ஐந்தினைப் பேணிக் கொள்ளுங்கள்

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      வாழ்வியல் பூமி
Screen-Shot

Source: provided

வாழ்வதற்காகவே உண்பவர்கள் இருக்கிறார்கள், உண்பதற்காகவே வாழ்பவர்களும் இருக்கின்றார்கள். இரண்டாம் வகையினர்தான் பல வியாதிகளையும், உடற்பருமனையும் விலைகொடுத்து வாங்கிக் கொள்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின்  அறிக்கையின் படி உலகம் முழுவதும் 100 கோடி பேர் அளவுக்கதிகமான எடையுடையோர்கள், 40 கோடி பேர் மிக அதிக எடையுடையோர், 30 கோடி பேர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர். நம் தமிழகத்தில் சென்னையில் மட்டும் 49மூ பேர் அளவுக்கு அதிகமான எடையுடையோர் பெரும்பாலான நோய்களுக்கு காரண கர்த்தாவாக அமையும் இந்த உடற் பருமனால் இரத்தக் குழாய் சம்பந்தப்பட்ட நோய்கள், இரத்த அழுத்த நோய், மாரடைப்பு, சில வகைப் புற்று நோய்கள்,  2 வகை நீரிழிவு நோய், கணைய நோய், பால் உணர்வில் நாட்டமின்மை, போன்ற கொடிய நோய்கள் ஏற்படுகின்றன.

தேவை சரிவிகித உணவு

உணவின் ருசி கருதி தனக்குப் பிடித்த உணவை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்த்து பல உணவுகளைக் கலந்து உண்ணப் பழகிக் கொள்ள வேண்டும். புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், மாவுச் சத்து, நார்ச் சத்து போன்ற எல்லாம் கலந்து உணவை சரிவிகித உணவு எனலாம். அத்தோடு உட்கொள்ளும் உணவுப் பொருளின் வெப்ப வெளிப்பாட்டுத் திறன் (கலோரி)"ஐயும் கணக்கிடத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை

போதைப் பொருட்களான மது, புகைபிடித்தல் குட்கா வகைகள், போதை மருந்து போன்றவற்றை முற்றாகத் தவிர்க்க வேண்டும். துரித உணவு வகைகள்  , ஐஸ் கிரீம், சாக்லேட், செயற்கை குளிர்பான வகைகள் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதில் ப்ரிசர்வேட்டர் போன்ற வேதிப் பொருட்கள் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். வனஸ்பதி போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவு  களையும், வெள்ளை மைதா போன்ற மிகச் சுத்திகரிக்கப்பட்ட   களையும் குறைத்துக்கொள்வது நல்லது. ஒரே எண்ணையை பல முறை உபயோகப்படுத்தக் கூடாது.

சமையல் எண்ணை ஓர் தெளிவு

சமையல் எண்ணையில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது. கொழுப்புச் சத்துக்களை இரண்டுவகையாகப் பிரிக்கலாம்.

1) முழுமையடையாத கொழுப்பு 

2) முழுமையடைந்த கொழுப்பு 

இதில் முதல்வகைக் கொழுப்பில் அதிக தீங்குகள் இல்லை. இவை இரத்தக் குழாயில் படியாது. இதில்  கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையுடையது.

இரண்டாம் வகைதான் மிக ஆபத்தானது. இதில் உள்ள கொழுப்புக்கள் இரத்தக் குழாயில் படிந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.

எனவே முழுமையடைந்த கொழுப்புக்கள் அதிகமாக உள்ள தேங்காய் எண்ணெய், நெய், பாம் ஆயில் போன்றவற்றை தவிர்த்துக் கொள்வதோடு சபோலா கார்டி ஆயில், கார்ன் ஆயில், சன் ஃபிளவர் போன்ற சமையல் எண்ணைகளை பயன்படுத்தி ஆரோக்கிம் காப்பீர்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

மனித வாழ்க்கையில் மரணம் என்பது தடுத்து நிறுத்த முடியாத ஒன்று, எனினும் நாம் உடல் நலத்துடன் வாழ முயற்சித்தல் வேண்டும். இவ்வளவு விஷயங்களை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவது சாத்தியம் தானா? முயன்றால் நம்மால் முடியும். அதே நேரம் மார்க்கக் கண்ணோட்டத்தோடு நோக்கினால் நிச்சயம் முடியும்.

ஐந்துக்கு முன் உள்ள ஐந்தினைப் பேணிக் கொள்ளுங்கள்.

1) முதுமைக்கு முன் உள்ள வாலிபம்

2) வறுமைக்கு முன் உள்ள செல்வம்

3) நோய்க்கு முன் உள்ள ஆரோக்கியம்

4) வேலைக்கு முன் உள்ள ஓய்வு

5) மரணத்திற்கு முன் உள்ள வாழ்வு

எனவே மேலே கூறியது போன்று நோய்க்கு முன் உள்ள ஆரோக்கிய வாழ்வினைப் பெற்று அதனைத் தக்க வைத்துக் கொள்ள மரணத்திற்கு முன் உள்ள வாழ்வில் வேலைக்கு முன் உள்ள ஓய்வினை உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே பயன்படுத்தாது நமக்கும், நம் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், படைத்த இறைவனுக்கும் ஆற்ற வேண்டிய நற்செயல்களை கருத்தில் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டுடன் கூடிய உடற்பயிற்சி செய்து நோயற்ற வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவன் நமக்கு உதவி செய்வானாக என மனதில் கொண்டு வாழ்வோம் நாம் காலையில் சாப்பிடும் உணவை ஆங்கிலத்தில் பிரேக்பாஸ்டஎன்று கூறுவதன் அர்த்தத்தை நாம் அவசியம் தெரிந்துகோள்ள வேண்டும்.

நாம் முன்னாள் இரவு எட்டு மணிக்கு இரவு உணவைச் சாப்பிட்டு தூங்கப் போகிறோம். அதன் பிறகு காலை எட்டு மணிக்குத்தான் நாம் சாப்பிடுகிறோம். ஆக, நாம் 12 மணி நேரம் உண்ணாமல் விரதம் இருக்கிறோம். அந்த விரதத்தை முடித்து வைக்கும் காலை உணவைத்தான் நாம் பிரேக்பாஸ்ட் என்கிறோம். அப்படியில்லாமல் நாம் நம் காலை வேளையின் அவசரச் சூழலுக்கு ஆட்பட்டு காலை உணவை சாப்பிடாமலோ அல்லது தள்ளிப்போடும்போது நம் உண்ணாவிரதம் நீட்டிக்கப்படுகிறது. நாம் இரவு சாப்பிடாமல் இருக்கும்போது நாம் முழு ஓய்வில் இருக்கிறோம்.

ஆனால், அதுவே காலையில் நாம் வேலை பிஸியில் இருக்கிறோம். ஆகவே, காலையில் சாப்பிடாமல் இருப்பது மிகவும் கெடுதலான விளைவைத் தரும். ஆகவே, நாம் காலையில் அவசியம் சாப்பிடவேண்டும். அதாவது விரதம் முடிக்க வேண்டும். நமக்கு காலை வேளையில் நம் வேலைதான் முக்கியமா முன் வந்து நிற்கிறது என்றால் அதற்கு முன்னதாக நாம் அதிகாலையில் எழுந்து தயாராகும் பழக்கத்திற்கு நாம் வர வேண்டும். அப்படியில்லாவிட்டால், பிற்பாடு உடல் நலம் கெட்டு இப்பொழுது நாம் செய்துவரும் வேலையையும் செய்ய முடியாமல் போகும். இது பரவாயில்லையா?

நாம் உண்ணாவிரதம் முடிக்கும்போது நாம் முதல் எடுப்பது பழச்சாறாகத்தான் இருக்கவேண்டும். அப்படியில்லாமல், காலை எழுந்தவுடன் காப்பி அல்லது டீ குடித்தால்தான் வேலையே ஆகும் என்றால் நாம் மோசம்தான். அப்படிக் காலையில் நாம் குடிக்கும் காப்பியும் டீயும் நம் செரிமான சக்தியை காசெய்கிறது.அப்புறம் மிச்சம் மீதி இருக்கும் செரிமான சக்தியைக் கொண்டுதான் நாம் அன்றைய நாளை கடந்தாக வேண்டும். “சரி, அதெல்லாம் இருக்கட்டும், டீ காப்பியை விடுவதெல்லாம் ஆகாத காரியம், வேறு வழி ஏதேனும் இருந்தால் கூறுங்கள்’ என்று நீங்கள் கேட்டால் என் பதில் இதுதான் நான் உங்களுக்கு “அன்றாட வாழ்வில்ஆரோக்கியம்’ பற்றிதான் சொல்ல வந்தேன், “அன்றாட வாழ்வில் அழிச்சாட்டியம்’ பற்றி அல்ல.

நாம் காலையில் எழுந்து பல் துலக்கி, சவரம் செய்து, காலைக்கடன் முடித்து, எனிமா எடுத்து, தொட்டிக் குளியல் செய்து பின் குளித்து, எளிய உடற்பயிற்சி முடித்து, பிராணயாமம் பயின்று, பின் தியானம் இயற்றிய பின் நாம் எடுக்கும் முதல் உணவு பழச்சாறாக இருந்தால் மிகவும் அற்புதமாக இருக்கும். அதற்கு நாம் கேரட் ஜூஸ் தயாரித்து அருந்தலாம். ஒரு நான்கு பேருக்கு செய்யும் அளவு முறைப் பற்றி பார்ப்போம். ஒருகால்கிலோ கேரட்டைத் துருவி அதனோடு ஒரு மூடித் தேங்காயையும் துருவிச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இதனோடு இயற்கை வெல்லம் தேவையான அளவில் சேர்த்து இரண்டு ஏலக்காயையும் போட்டு சிறிதுதண்ணீர் ஊற்றி மிக்ஸியில் ஓட்டிய பின்னர் வடிகட்டி அருந்தலாம். இப்படிக் காலையில் நீர்த் தன்மையோடுஎடுக்கப்படும் கேரட் ஜூஸானது நம் மண்ணீரலைப் புத்துணர்வாக்கி அன்றையச் செரிமானத் தன்மையைஉத்வேகம் கொள்ளவைக்கும்.

அடுத்து, நாம் காலையில் எடுக்கும் உணவானது செரிக்க இலகுவாகவும், வயிற்றை கெடுக்காததாகவும் இருக்க வேண்டும். காலையிலேயே நொறுக்குத் தீனிகளையும் எதிர்மறை உணவுகளையும் எடுக்க ஆரம்பித்தால் அன்றைய தினமும் மற்றொரு மோசமான தினமாகவே கழியும். அப்புறம் காலை அவசரத்திற்கு பிரட்டையும் சாஸையும் சாப்பிடுவதும் நம் செரிமானத்திற்கு நாமே சங்கு ஊதுவதற்குச் சமமாகும். நாம் அதிகாலையில் எழுந்து பொறுமையாக நம்மைத் தயார்படுத்தி, தரமான காலை உணவை மெதுவாக உண்டு காலை வேலையை ஆரம்பிப்போமேயாயின் அன்றைய நாள் முழுமையும் உற்பத்தி திறன் வாய்ந்த நாளாக விளங்கும் ஆகையால் அன்றைய இரவில் நாம் நிம்மதியாகத் தூங்குவோம்.

Kaatrin Mozhi Review | Jyothika | Vidharth | Lakshmi Manchu | Radha Mohan

Vanaraja Chicken | How to Start Vanaraja Chicken farming | வனராஜா வகை நாட்டுக்கோழி வளர்ப்பு சுலபமா

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து