முதுகலை பட்டாதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு மையம்: கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      கிருஷ்ணகிரி
krishnagiri collector 2017 07 02

கிருஷ்ணகிரி நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கே.ஆர்.பி. அணை அரசு மேல்நிலைப்பள்ளியில்  நடைபெற்ற முதுகலை பட்டாதாரி சிரியர்களுக்கான  தேர்வு மையத்தை கலெக்டர் சி.கதிரவன்   நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆசிரியர்கள் எழுத்து தேர்வு

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசின் வழிகாட்டுதல்களின்படி, முதுகலை பட்டாதாரிகள் ஆசிரியர்கள் எழுத்து தேர்வு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளந்தா மெட்ரிக் மேல்நிலைபள்ளி, கே.ஆர்.பி அணை அரசு மேல்நிலைப்பள்ளி, குந்தாரப்பள்ளி சரஸ்வதி வித்யாலாய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஒரப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி, எலத்தகிரி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,  பெரியபணமுட்டுலு எ.இ.எஸ்.  மேல்நிலைப்பள்ளி, அஞ்சூர் -ஜெகதேரி அரசு மேல்நிலைப்பள்ளி  ஆகிய  பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த 21 தேர்மையங்களில்  முதுகலை பட்டதாரிகள் ஆசிரியர் தேர்வுகள்  நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 8,116 பேர் தேர்வெழுதுவதற்கு  விண்ணப்பிருந்தனர். அவர்களில் 7, 527 நபர்கள் இன்று தேர்வெழுதினார்கள். 589 நபர்கள் தேர்வெழுதுவதற்க்கு வருகை தரவில்லை.   இத்தேர்வு மையங்களுக்கு பேருந்து வசதிகள், குடிநீர் வசதிகள், செய்யப்பட்டிருந்தது. இவ்வாய்வின் போது தனி துணை ஆட்சியர் வசந்தா, கிருஷ்ணகிரி வட்டாட்சியர் மோகனசுந்தரம், பள்ளி கல்வி ஆய்வாளர் ஜெயராமன், செய்தி மக்கள்  தொடர்பு அலுவலர் மு.சேகர்   ஆகியோர் உடன் இருந்தனர்


இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து