முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் தகவல் பரப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம்

செவ்வாய்க்கிழமை, 4 ஜூலை 2017      தேனி
Image Unavailable

 தேனி.-       தேனியில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (ருலுநுபுP) கீழ் தகவல் பரப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம்  மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
 கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்போது தெரிவிக்கையில், தமிழக அரசு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் பொருட்டு எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (ருலுநுபுP) கீழ் பல்வேறு தொழில்கள் தொடங்கிட எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட தகுதி வாய்ந்த தொழில் முனைவோர்களுக்கு 25 சதவீதம் மானியத்துடன் முறையே ரூ.1.00 இலட்சம், ரூ.3.00 இலட்சம் மற்றும் ரூ.10.00 இலட்சம் திட்ட மதிப்பில் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஹாலோ பிளாக்ஸ், டைல்;;ஸ், ஊறுகாய், அப்பளம், ஊதுபத்தி, சோப்பு, சோப்பு ஆயில், மெழுகுவர்த்தி போன்ற பல்வேறு பொருட்கள் தயாரித்தல், சமையல் பாத்திரம் வாடகைக்கு விடுதல், உணவகம், தையல், சலூன், போட்டோ ஸ்டுடியோ, ஜெராக்ஸ் கடை போன்ற பல்வேறு கடைகள் அமைப்பது போன்ற பல்வேறு தொழில் தொடங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2016-17-ஆம் நிதியாண்டில் 75 தொழில் முனைவோர்களுக்கு ரூ.37.50 இலட்சம் மானியம் வழங்கிட குறியீடு செய்யப்பட்டு, 79 தொழில் முனைவோர்களுக்கு ரூ.36.07 இலட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 75 தொழில் முனைவோர்களுக்கு ரூ.37.50 இலட்சம் மானியம் வழங்கிட குறியீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் (Nநுநுனுளு) கீழ் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி படித்து முடித்;த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக அனைத்து உற்பத்தி மற்றும் சேவைத்தொழில் தொடங்கிட ரூ.5.00 இலட்சம் முதல் ரூ.1.00 கோடி வரை மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
 புதிய தொழில் தொடங்கிட தொழில் முனைவோர்கள் சந்தையில் பொருளுக்கான தேவை என்ன, பொருளின் முக்கியத்துவம் அறிந்து அதன் விற்பனை இடங்கள், உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் கிடைக்கும் இடங்களை கண்டறிந்து குறைந்த செலவில் எவ்வாறு உற்பத்தி செய்வது என்பதை கணக்கிட்டு தொழில் தொடங்கிட வேண்டும். எனவே, இக்கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள தொழில் முனைவோர்கள் எந்தவித தொழில் தொடங்குவது, அதில் எவ்வாறு இலாபம் ஈட்டுவது, வங்கிகளுக்கு கடன் தொகையினை திருப்பி செலுத்துவது குறித்து துறை அலுவலர்கள்,  வங்கியாளர்கள், தொழில் வல்லுநர்களால் எடுத்துரைக்கப்படும் கருத்துக்களை நன்கு பயன்படுத்தி வாழ்வில் வளம்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ந.வெங்கடாசலம்,   தெரிவித்தார்.
 இக்கருத்தரங்கில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்  இராமசுப்ரமணியன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். மகளிர் திட்ட அலுவலர் திரு.கல்யாணசுந்தரம்   கனரா வங்கி உதவி பொது மேலாளர்  பாலசுப்ரமணியன்   பாரத மாநில வங்கி மேலாளர் திரு.புகழேந்தி   நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர்  வெங்கட்ரமணா   மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்  சீனிவாச கண்ணன்   கிராமப்புற சுய வேலை வாயப்பு பயிற்சி மைய இயக்குநர் திரு.மோகன்   தேனி மாவட்ட குறு சிறு தொழில் சங்க தலைவர்  அமர்நாத் அவர்கள் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். மாவட்ட தொழில் மைய மேலாளர் (கடன் வசதி)  தாமோதரன்   திட்ட விளக்கவுரையாற்றினார். கருத்தரங்கின் நிறைவாக மாவட்ட தொழில் மைய மேலாளர் (பொருளாதாரப்புலனாய்வு) திரு.கோமதி நாயகம்   நன்றியுரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து