பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி “உட்காரும் திண்ணை”ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலை கட்டடத்துறை மாணவர்கள் சாதனை!

புதன்கிழமை, 19 ஜூலை 2017      விருதுநகர்
srivi

  விருதுநகர். -ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் பி. எம். பிரியதர்சினி,  பி. சாந்தினி பிரபா,   கே.  சுபாமீனு,  எஸ். இராஜபிரபு ஆகிய நான்காம் ஆண்டு கட்டடவியல் துறை மாணவர்கள்,  துறைத்தலைவர் சி. ரமேஷ்பாபு,  ஆசிரியர்கள் ஆனந்த்பாபு,  உலகுசுந்தரம்,  ஆஷிபா ஆகியோர்களின்  ஆலோசனையில் “ பல்கலை சமுதாய தொண்டு” புராஜக்ட் திட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி மக்களுக்கு  உதவும் வகையில் மிகக்குறைந்த  செலவில்  உட்காரும் திண்ணையை கட்டிமுடித்துள்ளார்கள்.
மேலும்,  இந்த திண்ணையை  ஸ்ரீவி.  அருகில்  சல்லிப்;பட்டி  என்ற ஊரில்  ஆர் சி  பிரைமரி பள்ளியில்  மாணவ,  மாணவிகள்  உட்காருவதற்காக  கட்டிக்கொடுத்து  அதனை  மாணவர்கள் பயன்படுத்தும் நிகழ்ச்சிபள்ளியில்  ஊர் மக்கள் முன்னிலையில்  நடைபெற்றது.
பிளாஸ்டிக்  பாட்டில்களை  தெரு ஓரங்களில்  வீசுவதாலும், மக்காத  பொருளாக  இருப்பதால்,   சுற்றுப்புறசூழல்  மற்றும் நிலத்தடிநீர்  பாதிக்கப்படுகிறது.   இதைத்தவிர்க்கவும்  மற்றும் தற்போது மணல்  பற்றாக்குறையாக  இருப்பதால்  பிளாஸ்டிக் பாட்டில்களை  மறுபடியும்  உபயோகப்படுத்தி கட்டிடங்கள்  கட்டலாம்.
பிளாஸ்டிக்  பாட்டில் 1 கிலோயின் விலை ரூபாய்  18 .  இந்த திண்ணையை கட்ட  அரை லிட்டர்  அளவு  உள்ள 200 பாட்டில்களை பயன்படுத்தினர்.   இது செங்கலைவிட  விலைகுறைவானதாக உள்ளது.
பிளாஸ்டிக்  பாட்டிலில்  செம்மண்  மற்ற பாலித்தீன்  பைகளை அடைத்து  செம்மண்ணை  மூன்று   பங்காக  பிரித்து  மண்ணை இடைவெளி  இல்லாமல்  அடைக்கவேண்டும்  பிறகு  எப்பொழுதும்  போல  பாட்டில்களை அடுக்கி பயன்படுத்தினார்கள்.
இந்த திண்;ணையின் நீளம் 6அடி,  அகலம் 1.5 அடி ஆகும்.  பாட்டில்களை அடுக்கியபின் கழிவு மண் 3 மூடையை பயன்படுத்தி முக்கால் மூடை சிமிண்டில்  சுற்றுப்புறம்  மேல்பகுதி  பூசி  உலரவைத்தனர்.  ஆக மொத்தம்  ரூபாய் 1500 செலவானது  என்று  மாணவர்கள் கூறினர்.
மேலும்,  பல்கலை  கட்டடத்துறை ஆராய்ச்சிக்கூடத்தில்  பரிசோதனை முடிவின்படி, 200 வருடங்கள்  வரை இந்த  பிளாஸ்டிக்  பாட்டில் கட்டிடங்கள் தாங்கும்.  மேலும்,   7.6  ரிக்டர்  அளவு  நிலநடுக்கத்தையும்,  தாங்கும் என்று  தெரிவித்தார்கள்.  இதையே  சி எஸ் ஐ ஆர்  என்ற ஆராய்ச்சி  கூடத்திலும்  ஆய்வு  செய்து  பார்த்து  நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
இது  பெரும்பாலும்  ஆப்பிரிக்கன்,  கேரளா  நாடுகளில்  உபயோகித்து  வருகின்றனர்.   இதை அனைவரும் நடைமுறைப்படுத்தினால்  சுற்றுச்சூழல்  பாதிக்காது,  குறைந்த விலையில்  தரமான  கட்டிடங்கள்   கட்டலாம்
கிராமங்களில்   கழிப்பறை  கட்டுவதற்கும் பயன்படுத்தலாம்.  கடற்கரைகளில்  பொது இடங்களிலும்  திண்ணைகள்,  சுற்றுச்சுவர்  கட்டுவதற்கு  பயன்படுத்தலாம்   என்று கனத்த குரலில் கூறினர்  மாணவிகள்.
மேலும்,  இந்த  பிளாஸ்டிக் பாட்டில் திண்ணை புராஜக்டை  சென்னை காப்புரிமை கழகத்திற்கு  காப்புரிமைக்காக  விண்ணப்பித்துள்ளனர். 
மக்கள் பயன்படுத்தும் வகையில்  கழிவு பொருட்களை பயன்படுத்தி புராஜக்ட்செய்த  மாணவிகள்,  பேராசிரியர்களை
வேந்தர் முணைவர் கே. ஸ்ரீதரன்,  துணைத் தலைவர்கள் முனைவர் எஸ். சசிஆனந்த்,  அர்ஜூன் கலசலிங்கம்,  துணை வேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர்,  பதிவாளர் முனைவர் வெ. வாசுதேவன் ஆகியோர்  பாராட்டினர்.
மற்ற விபரங்களுக்கு  : 
மாணவி  பி. சாந்தினி பிரபா   :  8754348541

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து