காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் புத்தாக்க பயிற்சி

karikudi

காரைக்குடி.-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2017-18-ம் கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த முதலாமாண்டு கல்வியியல் மற்றும் உடற்கல்வியியல் மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடைபெற்றது. 

அழகப்பாபல்கலைக் கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் தமது தலைமை உரையில், தேசியத் தரநிர்ணயக் குழுவின் மூன்றாவது சுற்று தரமதிப்பீட்டில் தென்னிந்திய அளவிலும் மற்றும் தமிழக அளவிலும் நான்கிற்கு அதிகப்பட்ச புள்ளியான 3.64 பெற்று யூ தகுதியை பெற்றுள்ள  இப்பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு கல்வியியல் மற்றும் உடற்கல்வியியல் படிப்பில் சேர்ந்து படிக்கும் மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள் எனபெருமையோடு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தமது உரையில், பி.எட். மற்றும் உடற் கல்வி மாணவர்களிடம் உரையாற்றுவதை தாம் பெரிதும் விரும்புவதாக தெரிவித்தார். ஏனென்றால், அவர்களிடம் ஒரு கருத்தை சொன்னால், அக்கருத்து பலமாணவர்களுக்கு சென்றடையும். ஆசிரியர் பணி ஒருமகத்தான பணி என்றும், இளைஞர்களை பொறுப்புள்ள குடிமக்களாகவும், தலைவர்களாகவும் உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்குமிகவும் முக்கியமானது. ஆசிரியர்கள் தினம் தினம் புதுப்புது செய்திகளை தெரிந்து கொண்டு தங்களது அறிவை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.  புதுப்புது தொழில் நுட்பங்களை ஆசிரியர்கள் தெரிந்து கொண்டு அவற்றை கற்பித்தலில் பயன்படுத்த வேண்டும். மாறி வருகின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்பசவால்களை எதிர்கொள்ளக்கூடியவகையில் மாணவர்களை தயார் செய்யவேண்டியது ஆசிரியர்களின் கடமையாகும்.  ஆசிரியர்கள் வகுப்பறைக்கு செல்லும்போது, அன்றைய பாடம் தொடர்பான முழமையான குறிப்புகளை எடுத்துச் செல்லவேண்டும்.  அப்போதுதான், மாணவர்களிடம் உரியமரியாதையை பெறமுடியும். ஆசிரியர்கள் மாணவர்களைப் பற்றிமுழுமையாக தெரிந்துகொண்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, தியாக மனப்பான்மையோடு பணியாற்ற வேண்டும் எனகேட்டுக் கொண்டார். பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும் மாணவர்கள் நன்கு பயன்படுத்தி தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் கே. குருநாதன், கல்வியியல் புலமுதன்மையர் முனைவர் சிவக்குமார்,ஆராய்ச்சி முதன்மையர் முனைவர் டி.ஆர். குருமூர்த்தி, வேலைவாய்ப்புமைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே. உதயசூரியன், தேர்வாணையர் முனைவர் எச். குருமல்லே~; பிரபு, மைய நூலகர் முனைவர் எ.திருநாவுக்கரசு, முனைவர் கே. மகே~;, முனைவர் எஸ். ராஜாராம்,ஒருங்கிணைப்பாளர்,நாட்டுநலப்பணித் திட்டம்,முனைவர் பி.சுரே~; குமார், இயக்குநர், தன்னார்வ பயிலும் வட்டம், உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் எம். சுந்தர், பல்கலைக்கழக மருத்துவர் டாக்டர் ஆனந்தி ஆகியோர் தத்தம் துறைசார்ந்த செய்திகளையும், வாய்ப்புகளையும் எடுத்துக்கூறினர்.
இந்நிகழ்ச்சியில் 350-க்கும் மேற்பட்ட முதலாமாண்டு கல்வியியல் மற்றும் உடற் கல்வியியல் மாணவர்கள் மற்றும் அத்துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர்;. அழகப்பாபல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் வி. பாலச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். முனைவர் வி. பழனிச்சாமி, முதன்மையர் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து