Idhayam Matrimony

மகளிர் உரிமைத்தொகையால் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகமாகியுள்ளது: அமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 3 பெப்ரவரி 2026      தமிழகம்
kv-chezhiyan 2025-01-21

சேலம், கிராமங்களில் லட்சக்கணக்கில் பணம் புழங்குவதற்கு அடிப்படை காரணம் தமிழ்நாடு முதல்வர் வழங்கும் ரூ. 1,000 குடும்பத்தலைவிகளுக்கான மகளிர் உரிமைத்தொகை என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரச்சாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் சேலத்தில் நடந்த திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, ஒரு கிராமத்தில் 2 ஆயிரத்து 500 பேருக்கு மாதம் தலா ரூ. 1,000 குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்குகளுக்கு செல்கிறபோது அந்த மாதத்தில் கிடைக்கக்கூடிய கிட்டத்தட்ட ரூ. 25 லட்சம் கிராமத்தில் சுழற்சியடைகிறது. 

மளிகை கடையில், டீக்கடையில், ஜவுளிக்கடையில் , இறைச்சிக்கடையில் பணம் இல்லை என்ற நிலையை மாற்றி ஒவ்வொரு கிராமத்திலும் லட்சக்கணக்கில் பணம் புழங்குகிறது. கிராமங்களில் லட்சக்கணக்கில் பணம் புழங்குவதற்கு அடிப்படை காரணம் தமிழ்நாடு முதல்வர் வழங்கும் ரூ. 1,000 குடும்பத்தலைவிகளுக்கான மகளிர் உரிமைத்தொகை. ஆயிரம் மோடிக்கள் வந்தாலும், ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும், ஓராயிரம் எடப்பாடிக்கள் வந்தாலும் ஓமலூரில் உதயசூரியன் சின்னத்தை யாராலும் தடுக்க முடியாது. அது வெற்றிக்கோட்டை. என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து