முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டசபையில் ஒரே நாளில் 25 சட்டதிருத்த மசோதாக்கள் நிறைவேற்றம்

புதன்கிழமை, 19 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக சட்டசபையில் நேற்று ஒரே நாளில் 25 சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

மசோதாக்கள் தாக்கல்

தமிழக சட்டசபையில் ஜி.எஸ்டி வரி. கேளிக்கை வரி ஆகிய மசோதாக்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டன. மானியக் கோரிக்கை மீதான விவாதம் முடிவுற்ற பிறகு அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, ஜெயகுமார், கே.பி.அன்பழகன், வேலுமணி, வீரமணி, துரைக்கண்ணு, சி.வி. சண்முகம், பாலகிருஷ்ண ரெட்டி, நிலோபர் கபீல் ஆகியோர் இந்த மசோதாக்களை தாக்கல் செய்தனர்.

குரல் வாக்கெடுப்பு ...

சட்டசபையில் எந்த விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.வெளிநாட்டிற்கு பீர் ஏற்றுமதி அனுமதி, பள்ளிக்கட்டணம் சீரமைப்பு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் குறித்த 25 மசோதாக்கள் நேற்று ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் நிறைவேற்றியபோது எதிர்கட்சியான திமுக சபையில் இல்லை. காங்., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட இதர எதிர்கட்சியினர் பங்கேற்றனர். பிற்பகல் 2.20 மணி முதல் மாலை 3.05 மணி வரை 45 நிமிடங்களில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

அமைச்சர் பதில்

இதில் கட்டாயத் திருமணப்பதிவு சட்டத்திற்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீ்க் உறுப்பினர் அபுபக்கர் எதிர்ப்பு தெரிவித்தார். பள்ளிவாசல்களிலும் காஜூகளும் திருமணம் செய்து வைக்கும் இஸ்லாமிய திருமணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதனை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் இதனை நீதிமன்றம் ஏற்கவில்லை, எனவே எல்லா மதங்களின் திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலளித்தார். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும் அப்போது அவையில் அதிகாரிகள் மாடத்தில் அமர்ந்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து