முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்போம்: நவாஸ் ஷெரீப் கட்சி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பனாமா கேட்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஏற்போம் என்று ஆளும் பி.எம்.எல்-என் கட்சி அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் லண்டனில் முறைகேடாக சொத்துகளை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ‘பனாமா கேட்’ என்றழைக்கப்படும் இந்த வழக்கில் அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

பெரும்பாலும் பிரதமர் நவாஸுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்படலாம் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித் துள்ளனர். இந்த விவகாரம் குறித்து ஆளும் பி.எம்.எல்-என் கட்சியின் உயர்நிலைக் கூட்டம் இஸ்லாமா பாத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிரதமர் நவாஸ் தலைமை வகித்தார். இதில் மூத்த அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதன்பின் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கூறியபோது, பனாமா கேட் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஏற்போம் என்று தெரிவித்தனர்.

இந்த வழக்கால் பிரதமர் நவாஸ் பதவி விலக நேரிட்டால் அவரது இளைய சகோதரரும் பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இல்லையெனில் நவாஸுக்கு மிகவும் நெருக்கமான மூத்த அமைச்சர்களில் ஒருவருக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து