முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி தலைமையில் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. அ.தி.மு.க அம்மா அணியில் இணைந்தார்.

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

சேலம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சேலத்தில் சந்தித்து, அ.தி.மு.க அம்மா அணியில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி ஆறுக்குட்டி   எம்.எல்.ஏ இணைந்தார்.

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏவாக ஆறுக்குட்டி உள்ளார்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவில் , முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியில் முதல்நபராக ஆறுக்குட்டி எம்.எல்.ஏ இணைந்தார்.
இணைந்தார்

இந்நிலையில், சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் நேற்று காலை ஆறுக்குட்டி எம்.எல்.ஏ நேரில் சந்தித்து பேசி, அ.தி.மு.க அம்மா அணியில் இணைந்தார். அப்போது, மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெ\ங்கடாஜலம் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆறுகுட்டி பேட்டி

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய, கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, தான் மாற்று அணியில் இருந்த போதும், தொகுதி சார்பாக தான் சட்டப்பேரவையில் எழுப்பிய கோரிக்கைகளான, காவல்நிலையம், துணை மின்நிலையம், மேம்பாலங்கள் குறித்து உடனடியாக பரிசீலித்து, முதலமைச்சர் நடப்பு கூட்டத்தொடரிலேய, அதற்குரிய நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், இதற்கு நன்றி தெரிவித்து பேசிய பிறகு, ஓ.பி.எஸ் அணியில் தான் சங்கடங்களை சந்தித்தேன்.

வரும் 29-ந்தேதி கோவையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான கூட்டத்திற்கு ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், அதற்குரிய ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணிக்கப்பட்டேன்., இதனையடுத்து, தொகுதி மக்களை கலந்து பேசி, அவர்களுடைய அறிவுறுத்தலின் பேரில் முதலமைச்சர் தலைமையிலான அணியில் தான் இணைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஓ.பி.எஸ் தலைமையிலான அணியில் இணைந்த போது, எழுப்பிய கோரிக்கைகளான சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து விலக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதி விசாரணை ஆகிய கோரிக்கைகளில் உறுதியாக இருக்கிறீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அ.தி.மு.க.வில் தற்போது சசிகலா குடும்பத்தினரின் தலையீடு இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்றும், .ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அந்த கோரிக்கை குறித்து பேச முடியாது என்றும் கூறினார்.

இணைப்புக்கான முயற்சி செய்வேன்

அணிகள் இணைப்பு தொடர்பாக கேட்டதற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஒருமுறை தொலைபேசியில் பேசிவிட்டால், பிரச்சினை முடிவுக்கு வந்து விடும் என்று கூறிய ஆறுக்குட்டி எம்.எல்.ஏ, அதற்கான முயற்சியை தான் மேற்கொள்வேன் என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து