முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாடானை பகுதிகளில் பயிற்காப்பீட்டு தொகை கிடைக்கும் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூலை 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 

 

 

திருவாடானை -     திருவாடானை பகுதிகளில் மங்கலக்குடி பிர்காவில் பயிற்காப்பீடு கிடைக்காத நிலையில் விவசாயிகள் கடும் அதிர்ப்த்தி தெரிவித்திருந்த நிலையில்  சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் பயிற்காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் மத்தியில் பேச்சு
     திருவாடானை தாலுகாவில் கடும்நிலவியதை தொடர்ந்து விவசாயம் பொய்த்துப் போனது. இந்நிலையில் விவசாயிகள் அந்தந்த தொடகடக வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் விவசாய அலுவலகங்களில் பயிற் காப்பீடு செய்திருந்த நிலையில் தற்பொழுது திருவாடானை தாலுகாவில் தற்பொழுது பயிற்காப்பீடு பல்வேறு குலறுபடிகளாக அதாவது ஒரு சில பகுதியில் ஏக்கருக்கு 17,500 ரூபாயும், ஒரு சில பகுதியில் 5500 ரூபாயும் வழங்கப்பட்டு வரும் நிலையில் மங்கலக்குடி பிர்காவில் முற்றிலும் பயிற்காப்பீடு தொகை என்பதே வழங்கப்படவில்லை இதனால் ஆத்திரமுற்ற வெிவசாயிகள் நெய்வயல், ஓரிக்கோட்டை, மங்கலக்குடி, ஆண்டாவூரணி ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள்  முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில் இப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்  விவசாயிகளை சந்தித்து இந்த வருடம் பயிற காப்பீடு செய்த இப்பபகுதி விவசாயிகளுக்கு கண்டிப்பாக அணைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அதற்கு காலஅவகாசம் ஆகும் என்று தெரிவித்தார். மேலும் தொகுதி மக்கள் தங்களது குறைகளை வாய் வார்த்தையாக தெரிவிக்காமல் மனுக்களாக கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதற்கும் எடுக்காமல் விட்டால் என்னை கேள்வி கேட்க ஏதுவாக இருக்கும். என்று தெரிவித்தார்.
     விவசாயிகளை சந்திக்க வரும் பொழுது சட்டமன்ற உறுப்பினர் பாதுகாப்பிற்கு வந்த திருவாடானை காவல் துறை வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதி சிறு விபத்து ஏற்பட்டது. இதில் திருவாடானை அணைத்து மகளிர் காவல் நிலைய வாகனத்தின் பின்புற கண்ணாடி உடைந்து சிதறியது நல்லவேலையாக எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து