சங்கராபுரம் பகுதியில் காய்ச்சல் தடுப்பு பணிகள் கலெக்டர் மலர்விழி நேரில் பார்வையிட்டு ஆய்வு

siva news

 சிவகங்கை -சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை வட்டம், சங்கராபுரம் பகுதியில் காய்ச்சல் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்  .சு.மலர்விழி,  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 சங்கராபுரம் பகுதியில் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் காணப்பட்டதை தொடர்ந்து, 6 வட்டாரங்களிலிருந்து 5 மருத்துவக் குழு 40 சுகாதார ஆய்வாளர்கள், 160 களப்பணியாளர்களுடன் தீவிர கொசு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொண்டு வருவதை இன்று நேரில்; மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூடுதல் துப்புறவு பணியாளர்களை நியமித்து ஒட்டுமொத்த துப்புறவு பணி மேற்கொள்ளவும், கொசுப்புழு காணப்படும் வீடுகள் மற்றும் கொசு ஒழிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கவும், அபராதம் விதிக்கவும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார். குடிநீரை தினசரி குளோரினேஷன் செய்து வழங்கவும் அறிவுறுத்தினார்.
   இந்த ஆய்வின்போது, துணை இயக்குநர், சுகாதாரத்துறை மரு.யசோதாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.         

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து