முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் நிதிஷ் குமார் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

பாட்னா, பிகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் நிதிஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து நிவாரண உதவிகளும் உடனடியாக செய்துதரப்படும் மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என அவர் அறிவித்தார்.

பிகாரில் வரலாறு காணாத மழையால் பலத்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் பெய்யும் கனமழையால் பிகாரின் முக்கிய நதிகள் நிரம்பி வழிகின்றன. கிஷான்கன்ஜ், பூர்னியா, கத்தியார் உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ள நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அங்கு இதுவரை 46 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது தொடர்பாக சுதந்திர தின உரையில் நிதிஷ் குமார் கூறும்போது, "பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் உதவி முதலில் கிடைக்க வேண்டும் என்பதில் நான் எப்போதுமே உறுதியாக இருக்கிறேன்.

வெள்ள மீட்பு நிவாரணப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்பிவைத்தமைக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வடக்கு பிகாரில் நதிகள் அபாய அளவை தாண்டிப் பாய்கின்றன. வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன" என்றார். மாநிலம் முழுவதும் 254 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து