முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அதிபர் ஒபாமா பதிவிட்ட ட்வீட் பல லட்சம் பேரின் மனதை கவர்ந்தது

வியாழக்கிழமை, 17 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் :  மற்றவரின் நிறம், பின்னணி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் அவரை வெறுப்பதற்காக யாருமே பிறக்கவில்லை என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பதிவிட்ட ட்வீட் பல லட்சம் பேரின் மனதை கவர்ந்துள்ளது.

ஒபாமா தொடங்கி மோடி வரை ட்விட்டரில் தினசரி தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பல லட்சக்கணக்கானோர் தலைவர்களை பின் தொடர்வதால் அவர்களின் கருத்துக்கள் எளிதில் மக்களை சென்றடைகின்றன.

அப்படித்தான் கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பதிவிட்ட ஒரு ட்வீட், சமூக வலைதளத்தில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தில் இருதரப்பினர் நடத்திய பேரணியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வேதனையோடு பதிவிட்ட ஒரு ட்வீட்டிற்கு 3,963,862 பேர் லைக் போட்டுள்ளனர்.1,512,957 பேர் அந்த ட்வீட்டை ரீ ட்வீட் செய்துள்ளனர்.

அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் நடந்த உள் நாட்டுப் போரில் பங்கேற்ற படை தளபதி ராபர்ட் எட்வர்டு லீயின் உருவச் சிலையை அகற்ற வெர்ஜினியா அரசு முடிவு செய்ததையடுத்து குறிப்பிட்ட வெள்ளை இன மக்கள் சார்லோட்டஸ்வில்லே நகரில் இனவெறிக்கு எதிராக பேரணி நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து