முக்கிய செய்திகள்

டெங்கு காய்ச்சல்

வெள்ளிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2017      மருத்துவ பூமி
dengu mosquito

Source: provided

டெங்கு காய்ச்சல் ஏடிஸ் என்ற வைரஸ் கிருமியால் வரும் நோயாகும். கொசு கடிப்பதினால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. இந்த கொசு பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கக் கூடியது. நல்ல தண்ணீரில் முட்டையிட்டு வளரக் கூடியது.

டெங்குவில் மூன்று வகை உண்டு

1. சாதாரணடெங்கு : முதல் வகை டெங்கு காய்ச்சல் வந்தால் வந்த வழியே சென்றுவிடும். ஆதிக உடல் உஷ்ணம்,  இருமல், சளி, தலைவலி, உடல்வலி என்று இருக்கும்.

2. உதிரப் போக்குடன் கூடிய டெங்கு ஜீரம் : டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழித்துவிடும். இதன் எண்ணிக்கை குறையும் போது பல் ஈடு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர் பாதை, எலும்பு மூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். இந்தவகை காய்ச்சல் உயிருக்கு ஆபத்து தன்மை கொண்டது.

3. டெங்கு ஷாக் சிண்ட்ரோம் :  காய்ச்சல் குறைந்தும் ஓர் அதிர்ச்சி நிலை உருவாகும். இது ஆபத்தான நிலை. இந்நிலையில் இருப்பவர்களுக்கு கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப் போகும். சுவாசிக்க சிரமப்படுவார்கள். ரத்த அழுத்தமும், நாடிதுடிப்பும் குறையும். சுய நினைவை இழப்பார்கள். இவ்வகை உயிருக்கு ஆபத்து தன்மை கொண்டது. அறிகுறிகளை சரியாக கவனிக்காமல் விட்டால் நீரிழப்பு, இரத்தபோக்கு அதிகமாகி மரணத்தில் கொண்டு சேர்க்கும்.

பரிசோதனை:  ரத்தத்தில் எலிசா எனும் பரிசோதனை தட்டணுக்கள் பரிசோதனை

அறிகுறிகள் :

1. கடுமையானகாய்ச்சல்,

2. வயிற்றுவலி,

3. தாங்க முடியாத உடல்வலி,

4. மூட்டுவலி,

5. கண்ணுக்குப் பின்புறம் வலி,

6. தொடர்ச்சியான வாந்தி,

7. களைப்பு,

8. உடலில் அரிப்பு,

9. சிவப்புப் புள்ளிகள் போன்று தோன்றும்.

10. ரத்தஅழுத்தம் குறைவு,

11. ரத்தக் கசிவு,

12. மூச்சிறைப்பு ஏற்படும்.

13. ரத்ததட்டணுக்கள் குறைவு.

பரிசோதனை:  பரிசோதனை.  நோயாளிக்கு பரிசோதனை செய்து 1 மணி நேரத்தில் முடிவு தெரியும்.  இருந்தால் அவருக்கு டெங்கு பாதிக்கப்பட்டுள்ளது.

நிலவேம்புகுடிநீர் :  9 மூலிகைகளின் கலவைதான் நிலவேம்பு குடிநீர். கசப்பு சுவையின் ராஜா என்றே நிலவேம்பை சொல்லலாம். நிலவேம்பு மிகவும் சிறிய செடி 30 முதல் 120 செ.மீ உயரம் வரை வளரும். இதில் சிறிய வெள்ளைநிற  பூ பூக்கும். நிலவேம்பின் வேர், இலை, பூ அனைத்தும் மருத்துவகுணம் கொண்டது. இது காய்ச்சல், சளி, அலர்ஜி, சுவாச கோளாறு, டெங்கு காய்ச்சல் அனைத்தும் குணமாக்கும் தன்மை உடையது. நிலவேம்பை தமிழில் சிறியாநங்கை என்றும் அழைக்கப்படுகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம்.

1. நிலவேம்பு–காய்ச்சல் குறைக்கும், கழிவுகளை வெளியேற்றும், கல்லீரலின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

2. வெட்டிவேர்–தாகத்தை தணிக்கும். கழிவுகளை, வியர்வை மற்றும் யூரின் மூலமாக வெளியேற்றும்.

3. சந்தனம் - குளிர் தன்மை கொண்டது. காய்ச்சலை குறைக்கும்.

4. பேய்புடல் - கல்லீரலை பாதுகாக்கும். இரத்தத்தை சுத்தபடுத்தும்.

5. விளாம்மிச்சவேர்–குளிர் தன்மை கொண்டது. உள் மற்றும் வெளி காய்ச்சல் குறையும். வலிகளை குறைக்கும். உடல் எரிச்சலை குறைக்கும்.

6. கோரைகிழங்கு–மனஅழுத்தத்தை குறைக்கும். மனதை திடப்படுத்தும். காய்ச்சலை குறைக்கும்.

7. சுக்கு–உமிழ்நீரை சுரக்க செய்யும். ஜீரணசக்தியை மேம்படுத்தும்.

8. மிளகு–நோய் எதிர்ப்புசக்தியை அதிகபடுத்தும். கிருமிகளை வரவிடாமல் தடுக்கும்.

9. பற்படாகம் - இரத்த தட்டுனுக்களை அதிகபடுத்தும். குடலை சுத்தபடுத்தும். ஜீரணசக்தியை அதிகரிக்கும். வியர்வை வரவழைத்து காய்ச்சல் குறையும்.

நிலவேம்புகுடிநீரின் பயன்கள் :-

நிலவேம்பு குடிநீரை பருகுவதால் அனைத்து விதமான காய்ச்சல், உடல்வலி, தலைவலி,  மூட்டுவலி, தசைவலி, டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், சிக்குன் குன்யா குணமாகும். சர்க்கரை வியாதி, கல்லீரல் நோய், கேன்சர் உள்ளவர்களும் பயன்படுத்தலாம். இரத்தத்தை சுத்தமாக்கும். உடல் அலர்ஜியை குணமாக்கும்.

தயாரிப்பு முறை :- 250மி.லி. தண்ணீர் + இரண்டு தேக்கரண்டி நிலவேம்பு கொதிக்க வைத்து 60மி.லி. ஆகும் வரை காய்ச்சவும். பிறகு 30 முதல் 60 மிலி வரை தினமும் 2 வேளை வெறும் வயிற்றில் பருகலாம். (தேவைப்பட்டால் தேன் அல்லது பனைவெல்லம் சிறிது சேர்த்து பருகலாம்).

உட்கொள்ளும் அளவு:

குழந்தைகள் வயது 12 மாதம்   - 2.5 முதல் 5 மிலி

குழந்தைகள் 1 முதல் 3 வயது வரை - 5 மிலி

3முதல் 5வயது வரை   - 5 முதல் 7.5 மிலி

5முதல் 12வயது வரை   - 7.5முதல் 15 மிலி

13 முதல் 19வயது வரை   - 15 முதல் 30 மிலி

19முதல் 60 வயது வரை   - 30 முதல் 60 மிலி

60வயது மேல்     - 30 முதல் 60 மிலி

கர்ப்பிணிப் பெண்கள்   - 15 முதல் 30 மிலி

பாலூட்டும் பெண்கள்    - 30 முதல் 60 மிலி

குறிப்பு : சாப்பிடுவதற்கு முன் உட்கொள்ள வேண்டும்.

தொகுப்பு :டாக்டர் டி.கே.ஸ்ரீதேவி, உதவி மருத்துவ ஆலோசகர், அரசு மருத்துவமனை, எடப்பாடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து