முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கன் ஓபன் டென்னிஸ்: ரபேல் நடால், பிலிஸ்கோவா காலிறுதிக்கு முன்னேற்றம் - முகுருஷா அதிர்ச்சி தோல்வி

செவ்வாய்க்கிழமை, 5 செப்டம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்று போட்டிகளில் நடால், பிலிஸ்கோவா ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர். பிலிஸ்கோவா தோல்வியடைந்து வெளியேறினார்.

நடால் வெற்றி

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற நான்காவது சுற்று போட்டியில் முன்னணி வீரரான ரபேல் நடாலும், உக்ரேனின் அலெக்ஸாண்டர் டோல்கோபோலோவும் மோதினர். இப்போட்டியில் நடால் 6-2, 6-4, 6-1 என்ற வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிப்பெற்றார்.

கடும் சவால்

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆஸ்திரியாவின் டோம்னிக் தெயிம், அர்ஜெண்டினாவின் ஜீயான் மார்டின் டெல் பொர்டோவை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் சுற்றை தெயின் 6-1 என எளிதாக கைப்பற்றினார். அடுத்த சுற்றயும் தெயின் 6-2 என கைப்பற்றினார். அதன்பின்னர், சுதாரித்துக் கொண்ட அர்ஜெண்டினா வீரர் அடுத்த இரண்டு சுற்றுகளையும் 6-1, 7-6 என கைப்பற்றவே ஆட்டத்தின் விறுவிறுப்பு அதிகரித்தது.

பொர்டோ வெற்றி

வெற்றியைத் தீர்மானிக்கும் ஐந்தாம் சுற்றில் பொர்டோ 6-4 என கைப்பற்றினார். இதையடுத்து டோம்னிக் தெயிம் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறினார்.

முகுருஷா தோல்வி

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த நான்காம் சுற்றுப் போட்டியில் முதல்நிலை வீராங்கனணயான பிலிஸ்கோவா, அமெரிக்காவின் பிராடியை எதிர்கொண்டார். இப்போட்டியில், பிலிஸ்கோவா 6-1, 6-0 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிப் பெற்றார். இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் மூன்றாம் நிலை வீராங்கனை முகுருஷா, செக் குடியரசின் பெட்ரா சிவிடோவாவிடம் 7-6, 6-3 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 6 hours ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 3 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 4 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து