காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் “மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு” என்ற தலைப்பில் கருத்தரங்கம்

karikudi news

காரைக்குடி: -காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரி சார்பில் “மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு” என்ற தலைப்பில் ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி கருத்தரங்க அறையில்  நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் பேரா. வி.பாலச்சந்திரன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரை நிகழ்த்தினர். அவர் தமது உரையில் மாற்றுத்திறனாளிகளின் மகத்துவம் குறித்தும், அழகப்பா பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கல்வியியல் துறையின்; செயல்பாடுகள் பற்றியும் எடுத்துக் கூறினார். அண்மையில் கனடா நாட்டில் நடைபெற்ற உயரம் குன்றிய மாற்றுத்திரனாளிகளுக்கான உலக தடகளப் போட்டியில், ஈட்டி எறிதல் போட்டியில் அழகப்பா பல்கலைக் கழக பாரா விளையாட்டு மையத்ததைச் சேர்ந்த விளையாட்டு வீரர் யு.செல்வராஜ் தங்கப் பதக்கம் வென்று அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்ததையும் குறிப்பிட்டார்.
அழகப்பா பல்கலைக்கழக நிறுமச் செயலரியல் துறை பேராசிரியர் முனைவர் வேதிராஜன் தனது துவக்க உரையில் அரசாங்கமானது மாற்றுத்திறனாளிகளுக்கான திறனை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு நிர்ணயிக்கும் சுய தொழில்கள் அனைத்தும் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் உள்ளது என்றும் குறிப்பிட்டார். கல்வியியல் புல முதன்மையர் பேரா. P.சிவக்குமார் தனது கருத்துரையில், பேச்சில் இருக்கும் வேகம் செயலிலும் இருக்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகளின் செயல்பாடுகளைப் பற்றியும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறிய நிலைகளையும் பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் மைய பேராசிரியர் முருகேஸ்வரி, தனது சிறப்புரையில் பெண்கள் எழுச்சி மிக்கவர்களாக சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்றும், கரண்டி பிடித்த கைகளில் எழுதுகோலும் புத்தகமும் பிடிக்க வேண்டும் என்றும் மாற்றுத் திறனாளிகளின் திறமைகள் அளப்பரியது என்றும் அவர்களுக்குரிய மறியாதையை அளித்து வாழ்க்கையில் அவர்கள் வெற்றி பெற அனைத்து உதவிகளையும் செய்ய நாம் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரி முதல்வர்(பொ) முனைவர் யு.பாலு அனைவரையும் வரவேற்றார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், முனைவர் து.நு.மெர்லின் சசிகலா நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து