முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

செவ்வாய்க்கிழமை, 4 நவம்பர் 2025      இந்தியா
Election 2023-11-06

Source: provided

பாட்னா: பீகாரில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இதன் காரணமாக பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மகா கூட்டணியின் தலைவர்கள் நேற்று தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் நவம்பர் 6-ல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 18 மாவட்டங்களில் உள்ள 121 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்தச் சூழலில், வாக்காளர்களை கவரும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மகா கூட்டணியின் தலைவர்கள் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நேற்று போஜ்பூர் மற்றும் கயாவில் தேர்தல் பிரச்சாரங்களில் உரையாற்றினார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வைஷாலி, பாட்னா, சஹர்சா மற்றும் முங்கர் மாவட்டங்களில் நடக்கும் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றினார்.  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தர்பங்கா, கிழக்கு சம்பாரண் மற்றும் மேற்கு சம்பாரண் மாவட்டங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று (நவம்பர் 4) பீகாரில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பெண் தொண்டர்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் மோடியின் எக்ஸ் பதிவில், “பீகாரில் பெண்கள் சக்தி சட்டப்பேரவை தேர்தல்களில் பா.ஜ.க. - தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வதற்காக அசாதாரண ஆற்றலுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் பெண்களின் பங்கேற்பு பீகாரில் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று மகா கூட்டணியின் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கயா மற்றும் ஔரங்காபாத்தில் பிரச்சாரம் செய்தனர். மகாகட்பந்தனின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், சமஸ்திபூர், பெகுசராய், சஹர்சா, தர்பங்கா, முசாபர்பூர் மற்றும் வைஷாலி மாவட்டங்களில் உள்ள பல்வேறு தொகுதிகளில் 17 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றினார். அதேபோல மகா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கயாவில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து