Idhayam Matrimony

பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் த.வெ.க. தொண்டரணிக்கு பயிற்சி

ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2025      தமிழகம்
vijay 2025-01-06

Source: provided

சென்னை: சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொண்டரணியினருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. விஜய் பிரசாரம் செல்லும் இடங்களில் பாதுகாப்பு பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது தொண்டரணியினருக்கு, த.வெ.க. தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் பொதுச் செயலாளர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் பயிற்சி வழங்கினர்.

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஒரு மாத காலத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒரு மாதத்திற்குப் பிறகு தான் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சென்னைக்கு அழைத்து ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து, மீண்டும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் விஜய் முனைப்புக் காட்டி வருகிறார்.இதனைத் தொடர்ந்து, கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக வருகிற 5-ஆம் தேதி சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், இனி நடைபெறவுள்ள விஜயின் பிரசாரம் மற்றும் மக்கள் சந்திப்பு கூட்டங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரி ரவிக்குமார் தலைமையில் திட்டமிடல் குழுவை அமைக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்ட 15 அதிகாரிகள் இடம் பெறவுள்ளனர். இந்தக் குழு விஜயின் நிகழ்ச்சிகளில் மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை திட்டமிடுவதுடன், த.வெ.க. தொண்டர் படைக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்க இருக்கிறது.பிரசார பாதுகாப்பிற்காக, ஒரு தொகுதிக்கு ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் என 468 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

தேர்வு செய்யப்பட்ட தொண்டரணியினருக்கு நேற்று சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது .விஜய் பிரசாரம் செல்லும் இடங்களில் பாதுகாப்பு பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது தொண்டரணியினருக்கு, த.வெ.க. தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் பொதுச் செயலாளர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் பயிற்சி வழங்கினர்.

கரூர் சம்பவத்திற்குப் பிறகு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த த.வெ.க. தலைவர் விஜயின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம், நீதிமன்ற வழிகாட்டுதலின் படி இன்னும் 10 நாட்களில் மீண்டும் தொடங்க இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து