முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பீகாரில் தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும்: அமித்ஷா

செவ்வாய்க்கிழமை, 4 நவம்பர் 2025      இந்தியா
amitsha

பாட்னா, பீகார் தேர்தலில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பீகாரில் முதல்வர்  நிதிஷ் குமார் தலைமையிலான ஜக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் உள்ளது. பீகாரில் 243 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக நவம்பர் 6ல் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கும், 11-ம் தேதி மீதமுள்ள தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

முதல் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் நேற்றுடன் நிறைவடையும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று தர்பங்கா, மோதிஹாரியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா பேசியதாவது:-

பீகாரை பேரழிவிற்கு உட்படுத்திய காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னம் இருக்கும் பொத்தானை மக்கள் அனைவரும் அழுத்த வேண்டும்.தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோஷி நதி நீலை நீர்ப்பாசனத்திற்காகவும், வெள்ளத்தைத் தடுக்கவும் அரசு ரூ. 26 ஆயிரம் கோடி செலவிடப்படும்.

நவம்பர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நாளில் நீங்கள் தவறு செய்தால் பீகாரில் கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள், மிரட்டி பணம் பறித்தல் ஆகியவை மீண்டும் வழக்கமாகிவிடும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகாரை முழுமையான வளர்ச்சிக்கு கொண்டுசெல்லும்.பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால், மிதிலா, கோஷி, திருஹட்டைச் சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக பாட்னா அல்லது டெல்லிக்குச் செல்ல வேண்டிய அவசியமிருக்காது. ஏனெனில் எய்ம்ஸ்-தர்பங்காவில் தரமான மருத்துவ வசதிகளைப் பெறுவார்கள்.

காட்டாட்சி ராஜ்ஜியத்தை துடைத்தெறிய தேஜகூட்டணிக்கு மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். ஆர்ஜேடியின் காட்டாட்சி ராஜ்யத்தை மீண்டும் மாறுவேடத்தில் கொண்டுவர முயற்சி நடக்கிறது. பீகாரில் தேஜகூ 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து