முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை மாணவி வன்கொடுமை: 3 பேர் சுட்டுப்பிடிப்பு

செவ்வாய்க்கிழமை, 4 நவம்பர் 2025      தமிழகம்
Gun 2023-10-05

கோவை, கோவை மாணவி வன்கொடுமை குறித்து 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

தென்னகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாநகரில், வேலை மற்றும் கல்விக்காக பலர் தங்களது சொந்த ஊர்களை விட்டு அங்கு வசிக்கிறார்கள். இவர்களில் இளம் பெண்களும் தனியாக விடுதிகளில் தங்கியுள்ளனர். இதேபோல் மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அவர் தனியார் விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வருகிறார். அந்த மாணவிக்கு சமூக வலைத்தளத்தில் கோவையில் ஆட்டோ மொபைல்ஸ் கடை நடத்தி வரும் 25 வயதான வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் செல்போனில் பேசி வந்தனர். இது நாளடைவில் காதலாக மாறியது.

2 பேரும் நேரில் அடிக்கடி சந்தித்துக்கொண்டதுடன் விடுமுறை நாட்களில் வெளியே சென்று வந்தனர். கடந்த 3 தினங்களுக்கு முன்பு விடுமுறை என்பதால், அந்த மாணவி தான் தங்கி இருக்கும் விடுதியில் இருந்து வெளியே வந்தார். காதலர்கள் காரில் பல இடங்களுக்கு வெளியே சென்றனர். இரவில் கோவை விமான நிலையம் பின்புறம் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் காரில் அமர்ந்தபடி பேசிக்கொண்டு இருந்தனர்.

அவர்கள் 2 பேரும் காதல் மயக்கத்தில் தன்னிலை மறந்து மகிழ்ச்சியாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மொபட்டில் அந்த வழியாக வந்த 3 பேர், கார் தனியாக நிற்பதை பார்த்து அருகில் சென்றனர். காரில் உள்ளே காதலர்கள் இருப்பதை அறிந்த அவர்கள் காரின் கதவை தட்டி திறக்குமாறு கூறி மிரட்டினர். இதனால் காரில் இருந்த காதல் ஜோடி அதிர்ச்சியடைந்தனர். ஆனால் பயத்தில் அவர்கள் கதவை திறக்கவில்லை. 

இதையடுத்து அந்த 3 பேரும் அரிவாளால் காரின் கண்ணாடியை உடைத்து, காதலனுடன் இருந்த கல்லூரி மாணவியை வெளியே இழுத்தனர். அவரை விடாமல் காதலன் பிடித்துக்கொண்டு சத்தம் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் காதலனின் தலையில் அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். உடனே 3 பேரும் சேர்ந்து மாணவியை வலுக்கட்டாயமாக அங்கிருந்த மறைவான பகுதிக்கு கடத்தி சென்றனர். அவர்களிடம் இருந்து மாணவி தப்பிக்க போராடியபோது கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் மயங்கிய மாணவியை ஒருவர் பின் ஒருவராக என கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச்சென்றனர்.

அதிகாலை 2 மணியளவில் மயக்கம் தெளிந்த காதலன், தனது காதலியை தேடினார். ஆனால் அவரை காணவில்லை. உடனே கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தலையில் காயத்துடன் இருந்த காதலனை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் அனாதையாக கிடந்த மொபட்டை கைப்பற்றினர். அது திருட்டு மொபட் என தெரியவந்தது.

பிறகு கல்லூரி மாணவியை போலீசார் தேடினர். இரவு நேரம் என்பதாலும், அந்த பகுதி தெருவிளக்கு வசதி இல்லாத பகுதி என்பதாலும் மாணவியை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. சுமார் 1 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் புதர் மறைவில் கல்லூரி மாணவி நிர்வாண கோலத்தில் கிடந்ததை கண்டுபிடித்தனர். அவரின் உடலில் காயங்களும் இருந்தன. போலீசார் அந்த மாணவியை மீட்டு, சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கும்பலை தேடிவந்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்ட னர். இந்த நிலையில் மாணவியை பலாத்காரம் செய்த 3 பேரையும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் தனிப்படை போலீசார் அதிரடியாக சுட்டுப் பிடித்தனர். முன்னதாக துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பகுதியில் 3 பேரும் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் அர்ஜுன், சரவணம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் குணசேகர் தலைமையிலான காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர்.

பின்னர் தப்ப முயன்ற மூவரை பிடிக்க முயன்றபோது தலைமை காவலர் சந்திரசேகரை அந்த கும்பல் இடது கையில் வெட்டியுள்ளனர். தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட தொடங்கிய போலீசார், 2 பேரை இரண்டு கால்களிலும் ஒருவரை ஒரு காலிலும் சுட்டுப் பிடித்தனர். பிடிபட்ட 3 பேருக்கும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. காயமடைந்த தலைமை காவலர் சந்திரசேகருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பிடிபட்ட தவசி, சதீஷ், கார்த்திக் ஆகிய மூவரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற கோவை துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு அருகே தடயவியல் நிபுணர் குழு சோதனை நடத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து