முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15 கோடி குழந்தை தொழிலாளர்கள்: ஐ.நா. புள்ளிவிவரத்தில் அதிர்ச்சி தகவல்

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

நியூயார்க்: உலகளவில் 4 கோடி பேர் நவீன அடிமைத்தனத்தில் சிக்கி தவிக்கின்றனர். 15 கோடிக்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு ஆகியவை இணைந்து உலகளவில் அடிமைத்தனத்தில் சிக்கி உள்ளவர்கள் மற்றும் குழந்தை தொழிலாளர்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தியது. இதன் அறிக்கை ஐ.நா. பொது சபை கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகளவில் 4 கோடி பேர் அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளனர். அவர்களில் 2.90 கோடி பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள். அதேபோல் 15.2 கோடி அளவுக்கு குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் 7.21 கோடி பேர் ஆப்பிரிக்காவிலும் அதற்கடுத்த நிலைகளில் ஆசியா, பசிபிக்கிலும் வசிக்கின்றனர். நவீன கால அடிமைத்தனத்தில் சிக்கி உள்ள 4 பேரில் ஒருவர் குழந்தை தொழிலாளராக இருக்கிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து