எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எல்லா சீசன்களிலும் மக்களை தேடி வரும் பழங்களுள் ஒன்று ஆரஞ்சு. ஆரஞ்சுப்பழத்திற்கு மற்றொரு பெயர் கமலா பழம். இதன் நிறம் சிவப்பு, மஞ்சள் கலந்ததாக இருக்கும். ஆரஞ்சுப்பழத்தில் சிலவகை நல்ல இனிப்பாகவும், சிலவகை இனிப்பும் புளிப்பும் கலந்ததாகவும், சிலவகை வெறும் புளிப்பு சுவையுடன் இருக்கும். பல நோய்களை முன் கூட்டியே வராமல் தடுக்கும் மகத்துவமும், அனைத்து வயதினரும் தைரியமாகச் சாப்பிடக் கூடியதும், உடலில் ஏற்படும் உஷ்ணம், வயிற்று வலி அல்லது வயிறு சீராக்கும் ஆற்றல் உடைய பழம் ஆரஞ்சு.
ஆரஞ்சுப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இதில் வைட்டமின் ஏ, பி1, பி2, மற்றும் சி போன்ற உயிர்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. ஆரஞ்சுப்பழச்சாறு இரத்தத்தில் பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கும். உடல் பலகீனமாக உள்ளவர்கள் தொடர்ந்து ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும், உடல் பலம் பெறும். ஆரஞ்சுப்பழச்சாற்றில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, இளமைத் தோற்றத்தை உருவாக்கும். மலச்சிக்கலை நீக்கும், நன்கு ஜீரணமாகும், கழிவுகள் வெளியேறி குடல் சுத்தமாகும். இரவு படுக்கையில் படுத்தவுடன் தூக்கம் வராமல் தவிப்பவர்கள், ஆரஞ்சுப்பழச்சாற்றை அரை டம்ளர் அளவு எடுத்து, அத்துடன் தேக்கரண்டி அளவு தேன் கலந்து படுக்கைக்குச்செல்லும் அரை மணி நேரத்திற்கு முன் குடித்து வந்தால் நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும். ஆரஞ்சுப்பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து குடித்தால் ஜலதோஷம் குணமாகும்.
ஆரஞ்சுப்பழச்சாறு உடலை புத்துணர்வுடன் இருக்க வைக்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்படவும் உடலுக்கு முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்தைக் கொடுக்கும். பல் வலி, ஈறு வீக்கம், ஈறில் இரத்தம் வருதல் போன்ற கோளாறுகளை குணமாக்கும். ஆரஞ்சுப்பழம் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண், நெஞ்சுவலி, இதய நோய், எலும்பு மெலிவு முதலியவற்றை குணமாக்கும் வலிமை கொண்டது. ஆரஞ்சுப்பழத்தை முகத்தில் தேய்த்துவந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். பசும்பாலில் ஓரிரு சொட்டு ஆரஞ்சுப்பழச்சாறு கலந்து முகத்தில் தடவிவர முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும். ஆரஞ்சில் பல வைட்டமின்களோடு, சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து இருக்கிறது. பல நாட்களாக வியாதியில் பாதிக்கப்பட்டு தேறியவர்களுக்கு இது ஒரு சிறந்த இயற்கை டானிக். உடல் குளிர்ச்சி பெற, உடல் வலுப்பெற ஆரஞ்சு மரப்பூ சிறந்தது. ஆரஞ்சுப்பழச்சாறை கர்ப்பிணிகள் தினமும் ஒரு டம்ளரில் சிறிதறவு உப்பு சேர்த்து சாப்பிடலாம். ஆரஞ்சுப்பழத்தோலை தண்ணீரில் போட்டு அரைமணி நேரம் வேகவைத்து அந்த நீரில் வாய் கொப்பளிக்க பற்களில் உள்ள கிருமிகள் அழியும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி, பல் ஈறுகளில் இரத்தம் போன்றவையால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு டம்ளர் ஆரஞ்சுப்பழச்சாற்றை ஒரு வாரம் கொப்பளித்து விழுங்கி வந்தால் நிவாரணம் கிடைக்கும். ஆரஞ்சுப்பழத்திலுள்ள வைட்டமின் சி உருவாக கொலாஜென்எ ( COLLAGEN ) ன்ற வளர்ச்சி உண்டாக்கக் கூடிய சத்து - எலும்புகள், இரத்தகுழாயின் உட்புறச் சுவர் மற்றும் தசைநார்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரஞ்சுப்பழம் இரத்தத்தில் உள்ள கொழுப்புகளைக்குறைக்கவும், நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது. ஆரஞ்சுப்பழம் குழந்தைகளின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. இப்பழத்தை குழந்தைகளுக்கு நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எப்போதும் சுறுசுறுப்புடனும், நோய் தாக்குதலின்றி உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க உதவுகிறது. மாதவிலக்குக் காலங்களில் ஒருசிலருக்கு அதிக உதிரப் போக்கு ஏற்பட்டு உடல் சோர்ந்து, மன உளைச்சல் ஏற்பட்டால், இவர்கள் ஆரஞ்சுப்பழச்சாற்றில் காய்ச்சிய பால் அல்லது தேன் கலந்து குடித்துவந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவார்கள். ஆரஞ்சுப்பழத்தை தினமும் சாப்பிட்டால் உடல் வறட்சியை போக்கும், முகம் அழகு பெறும், தலைச்;சுற்றல் நீங்கும், வாய் துர்நாற்றம் போக்கும், தாகத்தைத் தணிக்கும் மருந்தாகும். ஆரஞ்சுப்பழத்தின் தோலை உலர்த்தி, அதில் சிறிது ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து இடித்து பொடி செய்து தினமும் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.
100 கிராம் எடை கொண்ட ஆரஞ்சுபழத்தில் உள்ள சத்துக்கள்
சக்தி – 53 கிராம் , வைட்டமின் ஏ – 99 மி.கிராம், வைட்டமின் பி – 40 மி.கிராம், வைட்டமின் பி2 – 18 மி.கிராம், வைட்டமின் சி – 80 மி.கிராம், நீர்ச்சத்து – 88 கிராம், பாஸ்பரஸ் - 18 மி.கிராம், கரோட்டின் - 1100 மி.கிராம், சுண்ணாம்புச்சத்து – 24 மி.கிராம், இரும்புச்சத்து – 0.2 மி.கிராம், புரதம் - 0.6 கிராம், கொழுப்பு – 0.2 கிராம், தாதுப்பொருள் - 0.3 கிராம்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
15 Feb 2026தஞ்சை, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பா.ஜ.க. அரசு முட்டுக்கட்டை போட நினைக்கிறது. நமக்கான நிதியை தர மறுக்கிறது.
-
40 ஆண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
15 Feb 2026சென்னை, 40 ஆண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார
-
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பது சந்தேகம்: ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
15 Feb 2026ஈரோட்டு, தினமும் தி.மு.க. காங்கிரஸ் வார்த்தைப்போர் நடக்கிறது என்றும் தி.மு.க.
-
தமிழ்நாட்டில் பிப். 23-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
15 Feb 2026சென்னை, தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
-
அன்பு வழியை போதித்த வள்ளலார் வழியில் ஏழை எளிய மக்களுக்காகவே தி.மு.க. அரசு செயல்படுகிறது அனைத்துலக வள்ளலார் மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Feb 2026சென்னை, அன்பு வழியை போதித்த வள்ளலார் வழியில் ஏழை எளிய மக்களுக்காகவே தி.மு.க.
-
பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1,657 பேருக்கு மடிக்கணினிகள் அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்
16 Feb 2026சென்னை, பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1,657 பேருக்கு மடிக்கணினிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
-
தங்கம் விலை சற்று சரிவு
16 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.


